பணக்கார நாடுகளில் இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் உயர்வின் மூலம் உலகச் சொத்துமதிப்பு 10.5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்திருக்கும் நிலையில், 2018ஆம் ஆண்டிற்கான ஹூருன் உலகப் பணக்காரர்கள் பட்டியல் (Hurun Global Rich List) அதிகப் பில்லியனர்கள் உள்ள நாடுகள் மற்றும் நகரங்கள் பற்றி முழுமையான ஆய்வு வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன தெரியுமா..?

ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

மொத்தம் 24 பில்லியனர்களைக் கொண்டுள்ள இந்நாட்டின் துபாய் நகரம், 19 பில்லியனர்கள் உள்ள நகரமாக உள்ளது.

நாட்டின் பணக்கார மனிதராகக் கலீப்பா பின் ஜாயத் நாக்யான் மற்றும் அவரது குடும்பம், 17பில்லியன் டாலர் சொத்துடன் திகழ்கிறார். 2018இல் 4 புதிய பில்லியனர்கள் பட்டியலில் சேர்ந்த பின்னரும், தரவரிசையில் இந்நாடு சரிவையே சந்தித்துள்ளது.

 

ஸ்பெயின்

25 பில்லியனர்கள் உள்ள இந்நாட்டில், 73பில்லியன் டாலர் சொத்துடன் அமென்சியோ ஒர்டிகா முதலிடத்தில் உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பணக்கார நாடான இந்நாட்டில், 2 புதிய பில்லியனர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

 

மெக்சிகோ

26 பில்லியனர்களைப் பெற்றிருக்கும் மெக்சிகோவின் பணக்கார மனிதராக, கர்லோஸ் ஸ்லிம் ஹீலூ மற்றும் அவரின் குடும்பம் 67பில்லியன் டாலருடன் இருக்கிறார்.

2018ல் இந்நாடு டாப்20 நாடுகளில் பட்டியலில் இடம்பெற்றுப் பெருமை சேர்த்துள்ளது.

 

துருக்கி

30 பில்லியனர்களைக் கொண்டுள்ள இந்நாட்டில், இஸ்தான்புல் நகரத்தில் மட்டும் 27 பேர் இருக்கின்றனர்.3.7பில்லியன் டாலருடன் முராட் உல்கர் மற்றும் அவரின் குடும்பம் நாட்டின் பணக்காரர்களாகத் திகழ்கிறது.

இந்தாண்டு புதிதாக ஒரு பில்லயனர் பட்டியலில் சேர்ந்திருந்தாலும், தரவரிசையில் பின்நோக்கி சென்றுள்ளது.

 

சிங்கப்பூர்

இந்நாட்டில் மொத்தம் 31 பில்லியனர்கள் இருக்கிறார்கள். எடுர்டோ சேவரின் (Eduardo Saverin) என்பவர் 11 பில்லியன் டாலர் சொத்துடன் நாட்டின் பணக்காரராக உள்ளார்.

இடம்பெயர்ந்து வந்தவர்கள் தான் பில்லியனர் எண்ணிக்கை உயர காரணமாகும். பட்டியலில் 21 பேர் சீனாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவ்வளவு ஏன்? சேவரின் ஒரு பிரேசிலியன்.

 

தென் கொரியா

33 பில்லியனர்கள் உள்ள தென்கொரியாவில், 30 பேர் சியோல் நகரத்தில் உள்ளனர். நாட்டின் பணக்காரராக லீ குன் ஹீ 18பில்லியன் டாலர்களுடன் உள்ளார்.

இவ்வருடம் ஒரு பில்லியனரை இந்நாடு இழந்துள்ளது.

 

ஆஸ்திரேலியா

41 பில்லியனர்கள் உள்ள நாடான இதில், சிட்னி நகரம் 18 பில்லியனர்களுடன், அதிகப் பில்லியனர் வசிக்கும் ஆஸ்திரேலிய நகரமாக உள்ளது.

12 பில்லியன் டாலர்களுடன் ஜீனா ரெனிஹார்ட் (Gina Rinehart) பணக்கார மனிதராகத் திகழ்கிறார். புதிதாக 14 பில்லியனர்கள் இணைந்ததால், தரவரிசையில் சட்டென்று முன்னேறியுள்ளது.

 

தாய்லாந்து

மொத்தம் 44 பில்லியனர்கள் உள்ள தாய்லாந்தில், 43 பில்லியனர்கள் பாங்க்காக் நகரத்தில் மட்டும் உள்ளனர். சரோன் ஶ்ரீவதானபக்தி என்பவர் 21பில்லியன் டாலர்களுடன் நாட்டின் பணக்கார மனிதராக உள்ளார்.

அவருடைய சரோன் போக்பாண்ட் என்ற உலகின் மிகப்பெரிய குழுமம், நாட்டின் பல பில்லியனர்களை உருவாக்க பொறுப்பேற்றுள்ளது.

 

இத்தாலி

44 பில்லியனர்கள் உள்ள இத்தாலியில், 25பில்லியன் டாலர்களுடன் லெநார்டோ டெல் வெசியோ பணக்கார மனிதராக உள்ளார்.

கடந்த வருடம் பிடித்த இடத்தை நழுவவிட்டாலும், புதிதாக 3 பில்லியனர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

 

ஜப்பான்

ஐப்பான் நாட்டில் மொத்தம் 46 பில்லியனர்கள் உள்ள நிலையில், அதில் 31 பேர் டோக்கியோ நகரத்தில் உள்ளனர். 21பில்லியன் டாலர் சொத்துடன் மசயோசி சன் நாட்டின் பெரும் பணக்காரராக உள்ளார்.

புதிதாக 4 பில்லியனர்கள் சேர்ந்தாலும், கடந்தவருடத்தை விடப் பின்நோக்கி சென்றுள்ளது.

 

கனடா

49 பில்லியனர்கள் உள்ள இந்நாட்டில், 14 பில்லியனர்களுடன் அதிகப் பில்லியனர் வாழும் நகரமாக டொரொன்டோ உள்ளது. ஜேம்ஸ் மற்றும் அர்தூர் 26பில்லியன் டாலர் சொத்துடன் நாட்டின் பெரிய பணக்காரராக உள்ளார்.

இந்நாடு பில்லியனர் சொத்து மதிப்பில் 21% வளர்ச்சி கண்டு, 160 பில்லியன் டாலராக உள்ளது.

 

பிரேசில்

பிரேசிலில் மொத்தம் உள்ள 49 பில்லியனர்களில், அதிகபட்சமாக 28 பேர் சா பாலோ நகரத்தில் உள்ளனர். நாட்டின் பணக்காரர் பட்டியலில் 18பில்லியன் டாலருடன் ஜோசப் ஷப்ரா முதலிடத்தில் உள்ளார்.

2017 உடன் ஒப்பிடும் போது, 6 பில்லியனர்கள் அதிகமாகி, பிரேசிலின் மொத்த மதிப்பு 175பில்லியன் டாலராக உள்ளது.

 

பிரான்ஸ்

நாட்டில் 51 பில்லியனர்கள் இருக்கும் நிலையில், அவர்களில் 36பேர் பாரிஸ் நகரில் உள்ளனர். பெர்னால்ட் அர்னால்ட் 78பில்லியன் டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

உலகின் ஆடம்பர தலைநகரான இதன் மொத்த மதிப்பு, கடந்த ஆண்டைவிட 35% உயர்ந்து 409பில்லியன் டாலராக உள்ளது.

 

ரஷ்யா

71 பில்லியனர்கள் உள்ள இந்நாட்டில், தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 62பேர் உள்ளனர். 20பில்லியன் டாலருடன் அலெக்ஸி மார்டசோவ் நாட்டின் பெரிய பணக்காரராக உள்ளார்.

ரஷ்யா பில்லியனர்கள் உருவாவதை ஊக்குவித்து, 22% உயர்வுடன் 318பில்லியன் டாலர் மொத்தமதிப்பை கொண்டுள்ளது.

 

ஸ்விட்சர்லாந்து

சுவிஸ் நாட்டில் 83 பில்லியனர்கள் உள்ள நிலையில், அதில் 22 பேர் ஜெனிவா நகரத்தில் உள்ளனர். ஜார்ஜ் பால் லேமென் என்பவர் 31பில்லியன் டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

நாட்டின் மொத்த மதிப்பு 49% உயர்ந்து, 330பில்லியன் டாலருடன் உள்ளது. மேலும் 6 பில்லியனர்களைப் பட்டியலில் இணைத்துள்ளது.

 

ஜெர்மனி

ஜெர்மனி நாட்டில் உள்ள 114 பில்லியனர்களில், அதிகபட்சமாக ஹம்பர்க் நகரில் 10 பேர் உள்ளனர். 30பில்லியன் டாலருடன் ஜார்ஜ் எப்.டபிள்யூ. சாப்ளர் முதலிடத்தில் உள்ளார்.

2017ல் மூன்றாம் இடத்தில் இருந்த இந்நாடு, 34 பணக்காரர்கள் வெளியேறியதால் 5ம் இடத்திற்குச் சரிந்தது.

 

யூனைடேட் கிங்டம்

118 பில்லியனர்கள் உள்ள இந்நாட்டில், அதில் 70 பேர் லண்டன் மாநகரத்தில் வசிக்கின்றனர். லெனார்ட் ஃப்லவாட்நிக் 20பில்லியன் டாலருடன் முதலிடம் பெறுகிறார்.

29 புதிய பில்லியனர்களைச் சேர்த்து முன்னேறியதுடன், 41% சொத்து மதிப்பு உயர்ந்து 416பில்லியன் டாலராக உள்ளது.

 

இந்தியா

131 பில்லியனர்கள் உள்ள இந்தியாவில், அதிகபட்சமாக 55 பேர் மும்பையில் உள்ளனர். 45பில்லியன் டாலர் சொத்துடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

நாட்டின் மொத்த சொத்து மதிப்பு 49% உயர்ந்து, 454பில்லியன் டாலராக உள்ளது.

 

அமெரிக்கா

571 பில்லியனர்கள் உள்ள இந்நாட்டில், நியூயார்க் நகரில் மட்டும் 92 பில்லியனர்கள் உள்ளனர். 123பில்லியன் டாலருடன் ஜெப் பிசாஸ் முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்கப் பில்லியனரின் சராசரி வயது 66. இது உலகச் சராசரியை விட 3 ஆண்டுகள் அதிகம். இதன் மொத்த சொத்து மதிப்பான 3 டிரில்லியன் டாலர், ப்ரான்ஸின் ஜி.டி.பியை விட அதிகம்.

 

சீனா

819 பில்லியனர் உள்ள சீனாவில், பீஜிங் நகரில் மட்டும் 131 பேர் உள்ளனர். போனி மா ஹூடேங் என்பவர் 47பில்லியன் டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக உலகப் பில்லியனர் தலைநகர் என டோக்கியோ அழைக்கப்படும் நிலையில், சீனாவின் மொத்த சொத்து 2.5 டிரில்லியன் டாலர் ஆகும். இது உலக ஜி.டி.பியில் இது 3.2%.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The countries with the most billionaires

The countries with the most billionaires
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns