டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஜப்பானை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி மூலமாக 3,250 கோடி ரூபாய்க்கு சாமுராய் டர்ம் கடனை பெறக்கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சமுராய் டர்ம் கடன் என்றால் யென் மதிப்பில் ஜப்பான் இல்லாத நிறுவனங்கள் பத்திரங்கள் மூலம் கடன் பெறும் திட்டமாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் 7 வருட முதிர்வுடன் 53.5 பில்லியன் டாலர் தொகையினைச் சமுராய் டர்ம் கடன் திட்டத்தின் கீழ் பெற ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அனுமதி அளித்துள்ளதாகவும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
ஆசிய நிறுவனங்களில் முதன் முறை
ஆசிய கார்ப்ரேட் நிறுவனம் ஒன்று முதன் முறையாகச் சாமுராய் கடன் திட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையினைப் பெற இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மிஜியோ வங்கி மற்றும் சுமிட்டோ மிட்ஸ்யூ வங்கி கார்ப்ரேஷனின் சிங்கப்பூர் கிளையும் இந்தக் கடன திட்டத்திற்காக விரைவில் ஆலோசிக்க உள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 168 மில்லியன் பயனர்களுடன் மொபைல் வணிகத்தினைச் செய்து வரும் நிலையில் சென்ற மாதம் 20,000 கோடி ரூபாய் வரை கடன் திட்டங்களின் கீழ் பெற இருப்பதாகத் தெரிவித்து இருந்தது.
அண்ணன் - தம்பி
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ அவரது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்க்கு சொந்தமான 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கவும் ஒப்பந்தத்தினைப் போட்டுள்ளது.
4ஜி
4ஜி சேவை வழங்குநரான ரிலையன்ஸ் ஜியோ எளிதாக 5ஜி சேவை அளிக்க மாறும் தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே 5ஜி மற்றும் 6ஜி வரை இவர்கள் வசம் உள்ள தொழில்நுட்பம் சிறப்பான சேவையினை வழங்கும்.
டிஜிட்டல் இந்தியா
இந்திய டிஜிட்டல் சேவையில் ரிலையன்ஸ் ஜியோ மிகப் பெரிய மாற்றத்தினைக் கொண்டு வர உள்ளது. இந்தியாவில் இருந்து மட்டும் 1.2 பில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று இந்தியாவை உலக டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதன்மை நாடாக மாற்றுவோம் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டுப் பத்திரங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது உள்நாட்டுக் கார்ப்ரேட் பத்திர திட்டங்களின் கீழும் 2,500 கோடி ரூபாயினை ஆக்சிஸ் வங்கி மூலமாகப் பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications