நாட்டின் முன்னணி வங்கிகளின் ஒன்றான யூகோ வங்கியில் சுமார் 621 கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் மோசடி நடந்துள்ளது, இதன் மூலம் வங்கிக்கு சுமார் 737 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வங்கி நிர்வாக அதிகாரி
இந்த வங்கி மோசடியில் முக்கியக் குற்றவாளியாக யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் கவுல் மீது சிபிஐ அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் இவ்வங்கியின் 10 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
முக்கிய நிறுவனம்
அருண் கவுல் உடன் சிபிஐ ஏரா இன்ஜினியரிங் இன்பரா இந்தியா லிமிடெட் தலைவர் ஹேம் சிங் பரானா மற்றும் இரு தணிக்கை அதிகாரிகளான பிங்கஞ் ஜெயின் மற்றும் வன்தனா சாரதா, ஆல்டியஸ் பினிசர்வ் பிரைவேட் லிமிடெட் நிறுவனதலைவர் பவன் பன்சால் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.
621 கோடி
ஏரா இன்ஜினியரிங் இன்பரா இந்தியா லிமிடெட், ஆல்டியஸ் பினிசர்வ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அருண் கவுல் வாயிலாகப் போலியான ஆவணங்கள் கொண்டு கடன் அளிக்கப்பட்டு, இந்தக் கடனை முறையாககேடாக இந்த நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளது.
கடன்
யூகோ வங்கியின் தலைவராக இருந்த அருண் கவுல் 2010 மற்றும் 2015ஆம் ஆண்டில் தலைவராக இருந்த போது கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications