உதய் கோட்டாக் தலைமையிலான கோட்டாக மஹிந்திரா வங்கி மதிப்புமிக்க வங்கிகள் பட்டியலில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி எனப்படு எஸ்பிஐ வங்கியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது.
எனவே தற்போது இந்தியாவின் மதிப்பு வங்கி பட்டியலில் முதல் இடத்தினை எச்டிஎப்சி வங்கியும், மூன்றாம் இடத்தினை எஸ்பிஐ வங்கியும் பிடித்துள்ளது.
பங்கு மூலதனம்
கோட்டாக மஹிந்திரா வங்கியின் பங்குகள் விலை 2 சதவீதம் வரை உயர்ந்த நிலையில் அதன் சந்தை மூலதனம் 2.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. எஸ்பிஐ வங்கியின் சந்தை மூலதனம் 2.22 லட்சம் கோடியாக உள்ளது.
எஸ்பிஐ
எஸ்பிஐ வங்கியின் பங்குகள் இன்றைய சந்தை நேர முடிவில் 1.90 புள்ளிகள் என 0.76 சதவீதம் சரிந்து 249.30 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டது.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இன்றைய சந்தை நேர முடிவில் எச்டிஎப்சி நிறுவனப் பங்குகள் 10.60 புள்ளிகள் என 0.55 சதவீதம் உயர்ந்து 1,938.65 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியானது அடுத்தடுத்து நிதி மோசடிகளில் சிக்கி வரும் நிலையில் பங்குகள் மோசமான நிலையில் உள்ளது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் நிறுவன வங்கியாக ஆக்சிஸ் வங்கி உள்ள நிலையில் நோமுரா கோட்டாக் வங்கி இதனை வாங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. ஒருவேலை இது நடந்தால் எச்டிஎப்சி வங்கிக்கு மிகப் பெரிய போட்டியாகக் கோட்டாக் மஹிந்திரா வளரும்.
ஐசிஐசிஐ & ஆக்சிஸ்
ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகளும் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் இரண்டு நிறுவனப் பங்குகளும் கடந்த சில வாரங்களாகச் சரிந்து காணப்பட்டு வருகின்றன
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications