உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் கார் என்றால் நம் நினைவிற்கு வரும் முதல் நிறுவனம் டெஸ்லா தான். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தப்பட்டு மக்களை ஈர்த்து வருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு இணையாக வேகத்தில் இயங்கும் டெஸ்லா கார்கள் முழுமையாகப் பேட்டரி மூலம் இயங்குகிறது.
அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டெஸ்லா உலக ஆட்டோமொபைல் சந்தையில் 2ஆம் அத்தியாயத்தை எழுதத் துவங்கியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. உலக நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு பெரிய அளவிலான வெற்றியை அடைய முடியாத காரணத்தால் திட்டத்தைக் கைவிட்டது.

பல முன்னணி நிறுவங்கள் இதை ஒரு கற்பனையாகவே பார்த்தபோது டெஸ்லா மட்டும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னோடி ஆகா திகழ்வதே டெஸ்லா தான். இதன் காரின் ஆரம்ப விலையே 35 லட்சம் ரூபாய்.
இந்த நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க், இவர் உலகின் இளம் வயது பில்லியனர்களில் ஒருவர். இவரின் சிந்தனைகள் அனைத்துமே மனிதனின் எதிர்காலத்தை மேம்படுத்தவே இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துவிடலாம், அது மட்டும் இல்லாமல் எண்ணெய்யில் இயங்கும் வாகனங்கள் பூமிக்கு மாசு ஏற்படுத்துகிறது, இதனால் தான் எலக்ட்ரிக் வாகனம் தயாரிக்க எண்ணம் வந்தது என்று குறிப்பிட்டார்.
இத்தனை பெருமைக்கு உரிய டெஸ்லா காரின் தயாரிப்பை முழுமையாகப் பார்க்க உங்களுக்கு ஒரு அறியவாய்ப்பு.


Click it and Unblock the Notifications