இந்திய நகரங்களில் அதிகச் சம்பளம் அளிக்கும் நிறுவனங்கள் பெங்களூருவில் தான் உள்ளது என்றும் சராசரியாக ஆண்டுக்கு 10.8 லட்சம் ரூபாய் வரை இங்கு உள்ள ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்றும் ரன்ஸ்டாட் இன்சைட்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை இந்திய நகரங்களில் 6 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த 20 துறைகள் சார்ந்த 1,00,000 ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு
ரன்ஸ்டாட் இன்சைட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பெங்களூரு 10.3 லட்சம் ரூபாய் என முதல் இடத்தினையும், புனே இரண்டாம் இடத்தினையும் பிடித்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சராசரியாக 9.9 லட்சம் ரூபாயும், நிதி நகரமான மும்பையில் உள்ளவர்கள் சராசரியாக 9.2 லட்சம் ரூபாயினையும் ஆண்டுச் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
சென்னை
வந்தாரை வாழ வைக்கும் சென்னை 8 லட்சம் ரூபாயுடன் 5-ம் இடத்தினைப் பிடித்துள்ளது. அதே நேரம் ஹைதராபாத் 7.9 லட்சம் ரூபாயுடன் 6-ம் இடத்தினையும், கொல்கத்தா 7.2 லட்சம் ரூபாயுடன் 7-ம் இடத்தினையும் பிடித்துள்ளது.
துறைகள்
துறை வாரியாக அதிகச் சம்பளம் என்று பார்த்தால் பார்மா மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 9.6 லட்சம் வரை சராசரி சம்பளத்தினை அளித்துள்ளன.
எப்எம்சிஜி
பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறையினைத் தொடர்ந்து வேகமாக நுகரக் கூடிய எப்எம்சிஜி துறையில் 9.2 லட்சம் ரூபாய் சராசரி சம்பளமாக அளிக்கப்படுகிறது.
ஐடி துறை
இந்திய நிறுவனங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்வதில் முதல் இடத்தில் உள்ள ஐடி துறையில் சராசரியாக ஆண்டுக்கு 9.1 லட்சம் சம்பளமாகப் பெறுகின்றனர்.
கட்டுமானம் & ரியல் எஸ்டேட்
உள்கட்டமைப்பு, கட்டுமானம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் 9.1 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு என்பது சராசரியாக உள்ளது.
மருத்துவர்கள்
சிறப்பு மருத்துவர்கள் ஆண்டுக்கு 18.4 லட்சம் ரூபாய் சராசரி சம்பளத்தினைப் பெறுகிறார்கள். பிளாக் செயின் தொழில்நுட்ப வல்லுநர்கள் 14.6 லட்சம் ரூபாய் சராசரி சம்பளத்தினைப் பெறுகிறார்கள்.
எல்லாம் திட்டமிட்ட செயல்..
திடீர் பணத்தட்டுப்பாட்டு..
ஐபிஎல் சியர் லீடர்களுக்கு இவ்வளவு சம்பளமா!
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications