மாநில அரசு மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் கோவாவை சுற்றுலாவுக்கு முக்கிய இடமாகவும், போக்குவரத்து மையமாகவும் மேம்படுத்த மத்திய அரசு செயலாற்றி வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
தாபோலிம் விமானநிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் சந்தித்த சுரேஷ் பிரபு மோப்பா விமான நிலையம் 2020 செப்டம்பர் வாக்கில், செயல்பாட்டுக்கு வரும். மோப்பாவுடன் சேர்ந்து தாபோலிம் விமான நிலையமும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
புதுப்பிப்பு பணிகள்
ரூ.300 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாபோலிம் விமானநிலைய புதுப்பிப்பு பணி நிறைவடைந்து, ஜூலை மாதத்தில் புதிய பல அடுக்கு வாகன நிறுத்த வளாகத்துடன் செயல்பாட்டுக்கு வரும்.
தாபோலிம் விமான நிலையத்தில் ஒரு பகுதி டாக்சி சேவைகளைச் செயல்படுத்துவதற்காக கோவா சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்படும்.
விவசாயிகளுக்கு உதவி
ஒரு பகுதி உள்ளூரில் உற்பத்தியாகும் பொருட்கள், புத்தகங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்காக மாநில அரசுக்கு ஒதுக்கப்படும்.
சர்வதேச சந்தைக்கு எளிதாகச் சென்றடைய சரக்குப் போக்குவரத்து விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று திரு. சுரேஷ் பிரபு கூறினார். இரண்டு விமானநிலையங்களைக் கோவா பெறும்போது, பயணிகளைக் கையாளும் திறன் மூன்று கோடியாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இராணுவ விமான தளம்
தாபோலிம் விமான நிலையமானது இராணுவ விமான தளமாகும். அதனையே பயணிகள் விமான நிலையமாகவும் பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதால் புதிதாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications