கூகிள்-ல எல்லாமே ப்ரீ தான்.. ஆனாலும் எப்படி கோடி கோடியா வருமானத்தை பெறுகிறது..?

2017 ஆம் ஆண்டில் உலகின் மிக மதிப்பு வாய்ந்த நம்பர்-1 பிராண்ட் வலைத்தளங்களின் முடி சூட மன்னன் "கூகிள்" ஆகும். மார்ச் 2017-ல் S&P 500 இல் 581 பில்லியன் டாலர்கள் சந்தை மூலதனத்தினைக் கொண்டிருந்த கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருந்தது.

விக்கிபீடியாவில் கூகுளைப் பற்றிப் புரட்டிப்பார்த்தால், இணையம் தொடர்பான சேவைகள்,விளம்பர தொழில்நுட்பங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றை உள்ளடக்கிய நிபுணத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமென்பது உங்களுக்கு விளங்கும். சிம்ப்ளாகச் சொல்லவேண்டுமென்றால் , கூகுள் ஒரு மிகச் சிறந்த விளம்பர நிறுவனம் மற்றும் அதன் மிகப்பெரிய சொத்து அதன் பயனர்கள்.

உங்களுக்கும் ஒரு கூகிள் அக்கௌன்ட் இருக்குமே?, மேலும் உங்களுக்குத் தேவையான பதில்களுக்கு "googling" செய்வீர்கள் தானே?. இந்தச் சேவைகள் அனைத்தும் கூகிள் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. கூகுளின் இந்த நல்ல பெயரானது இதனை நம்பும் எண்ணற்ற பயனர்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது.

கூகிள் நிறுவனம் எப்படி இவ்வளவு பணத்தைச் சம்பாதிக்கிறது ?

கூகிள் நிறுவனம் எப்படி இவ்வளவு பணத்தைச் சம்பாதிக்கிறது ?

இதற்கான பதில் மிகவும் சுலபம். அது வேறொன்றுமில்லை "விளம்பரம்" தான் அது. கூகிள் நிறுவனம் அதன் பெரும்பங்கு லாபத்தை அட்வர்டைசிங் மூலமாகவே பெறுகிறது. ஆனால் இது ஒரு விளம்பர நிறுவன வகையைச் சேர்ந்தது கிடையாது. இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றும் அழைக்கப்படும் ஒரு வர்த்தக மாதிரியைக் கொண்டுள்ளது,இந்த வகை மார்க்கெட்டிங்கே கூகுளை ஒரு பாரம்பரிய விளம்பர நிறுவனத்திடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

Adwords மற்றும் Adsense

Adwords மற்றும் Adsense

Adwords மற்றும் Adsense ஆகியவை கூகிள் வழங்கும் இரண்டு சேவைகளாகும். வலைத்தளங்களுக்கான ட்ராஃபிக்கை உருவாக்குவதற்கான திட்டமிட்ட வழியைக் கொண்டுள்ளது இது , எடுத்துக்காட்டாக வாங்க விரும்பும் ஒரு புத்தகத்தின் பெயரை நீங்கள் தட்டச்சு செய்யும் போது, அந்தப் புத்தகத்தை விற்பனை செய்யும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களின் விளம்பரங்களை நீங்கள் அந்த வலைப்பக்கத்தின் மேல் அல்லது வலது பக்கத்தில் காண்பீர்கள்.

 விளம்பரம்

விளம்பரம்

கூகிள் என்ன செய்கிறதென்றால் , விற்பனையாளர் ப்ராடக்டின் முக்கிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த அனுமதிக்கிறது, எனவே ஒரு கூகிள் பயணர் எதாவது ஒரு வார்த்தையை டைப் செய்யும்பொழுது அந்த வார்த்தையுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் விளம்பரத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் கூகிள் பயனரிடம் அந்த ப்ராடக்ட் பற்றிய விளம்பரத்தை எளிதில் அடையச் செய்கிறது கூகிள்.

தேடலில் விளம்பரம்

தேடலில் விளம்பரம்

நீங்கள் சர்ச் செய்யும்பொழுது வந்து விழும் முடிவுக்கு அடுத்ததாக "விளம்பரதாரர்" அல்லது "விளம்பரம்" என்று பார்ப்பீர்கள். இதன் பொருள், ஒரு விற்பனையாளர் குறிப்பிட்ட வார்த்தைக்கு AdWords ஐ தேர்வு செய்துள்ளார். அது அந்தத் தயாரிப்பாளரின் பொருளை பயனர் கிளிக் செய்யும் வண்ணம் கண்ணைப்பறிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட அனுமதிக்கிறது என்பதேயாகும்.

தேடி வரும் பயனர்களுக்கு விளம்பரம் அளித்தல்

தேடி வரும் பயனர்களுக்கு விளம்பரம் அளித்தல்

பயனர் உங்களைத் தேடி வரும்படி செய்வதே ஒரு திறமையான விளம்பர மாதிரியை உருவாக்குதல் ஆகும். அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடும் ஒரு நபர் உங்கள் வலைத்தளத்தை இதன் மூலம் சரியாகக் கண்டுபிடிக்கிறார் , அதாவது பாரம்பரிய விளம்பரங்களைப் போன்று எல்லா இடத்திலும் சென்று விளம்பரம் செய்வதைத் தவிர்த்து நீங்கள் தேவையான வாடிக்கையாளர்களை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறீர்கள் என்பதே இதன் பொருள்.

பே பர் கிளிக் (Pay per Click):

பே பர் கிளிக் (Pay per Click):

கூகிள் ஒரு வித்தியாசமான வருவாய் மாதிரியில் கூட வேலை செய்கிறது, அதாவது பே பர் கிளிக் அல்லது PPC என இது அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு பயனர் உங்கள் விளம்பரத்தில் கிளிக் செய்தால் மட்டுமே நீங்கள்(விளம்பரதாரர்கள்)கட்டணம் செலுத்த வேண்டும். இது குறைவான டிராபிக்கைப் பெறும் சிறிய அளவிலான வியாபாரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கூகிள் விளம்பரத்தை தேடலில் எப்படி அளிக்கிறது?

கூகிள் விளம்பரத்தை தேடலில் எப்படி அளிக்கிறது?

உதாரணமாக ஒரு பேக்கரி, அதன் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களை மட்டுமே இலக்கு வைக்க விரும்புகிறது. எனவே பயனர் "பெங்களூரில் உள்ள பேக்கரி" என டைப் செய்யும் போது கூகிள் இந்தப் பே பர் கிளிக் வசதி மூலம் பயனருக்கு காட்டும் முடிவுகளில் அந்தப் பேக்கரியின் பெயரைக் காட்டும். இப்போது, நீங்கள் நகரத்தில் உள்ள அனைத்து பேக்கரிகளின் பெயரையும் இதே போல் கூகிள் பட்டியலிட்டால் அந்தக் குறிப்பிட்ட கடைக்கு எப்படிப் பயனளிக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். பே பர் கிளிக் ஏல முறையில் இயங்குகிறது . ஒவ்வொரு வியாபாரத்திலும் பொதுவாகப் பல நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடுகின்றன.

எப்படி கூகிளில் முதலில் வருவது

எப்படி கூகிளில் முதலில் வருவது

ஒரு பயனர் தேடலில் இருக்கும்பொழுது சம்பந்தப்பட்ட முக்கிய வார்த்தைகளின் மாதிரியை எந்த நிறுவனம் அதிக விலை கொடுத்துப் பெற முடிகிறதோ அவர்களின் விளம்பரமே முதலில் வந்து விழும். இருப்பினும் கூகுள் ஏலத்தில் ஒரு முடிவுக்கு வருவதற்கு மிக அதிகமான தொகையை மட்டும் நம்புவதில்லை, மாறாக அந்த வலைத்தளத்தின் தரம், பொருத்தம் மற்றும் யூசர்களுக்கு ஏற்படும் பயன் ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கிறது.

Adsense வருவாய்கள்

Adsense வருவாய்கள்

Adsense என்பது வலைத்தளங்களைக் கூகிள் பிராண்டட் விளம்பரங்களைப் பட்டியலிட அனுமதிக்கும் சேவை ஆகும். இது தீர்மானிக்கப்பட்ட வழிமுறைகளில் வேலை செய்கிறது. நீங்கள் ஃபிட்னெஸ்சைப் பற்றிய ஒரு வலைத்தளத்தில் இருந்தால், உடற்பயிற்சிக்கான சாதனங்கள் , உடற்பயிற்சி தொடர்பான விளையாட்டு உடைகளுக்கான விளம்பரங்கள் தானாகவே வருவதைக் காணலாம். மற்ற நேரங்களில் வரும் விளம்பரங்கள் உங்கள் சமீபத்திய தேடல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சரியாகக் கவனித்தீர்களானால் நீங்கள் சில காலத்திற்கு முன்பே தேடிய அல்லது பார்த்த குறிப்பிட்ட விளையாட்டுக் காலணிகள் மற்ற வலைத்தளங்களிலும் உங்களைப் பின்தொடர்வதைக் காணலாம்.

அனைத்து இணையதளங்களிலும் தோன்றும்

அனைத்து இணையதளங்களிலும் தோன்றும்

முன்பு நீங்கள் தேடி வந்த ஒரு ப்ராடக்ட் நீங்கள் செல்லும் ஒவ்வொரு இணையதளத்திலும் தோன்றுவதை நீங்கள் கண்டிருக்கலாம்.மேலும் ஆச்சரியமாக , நீங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் உபயோகப்படுத்திய ஒரே ஜிமெயில் கணக்கில் உங்கள் மொபைலில் உள்நுழைந்திருந்தால், அங்கேயும் அதே ப்ராடக்ட் விளம்பரம் வருவதைக் கண்டுபிடிப்பீர்கள். Adwords போல, விளம்பரதாரர்களிடம் இங்கே விளம்பரத்தின் மேல் செய்யப்படும் கிளிக்கிர்க்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் இந்த விளம்பரங்கள் காண்பிக்கப்படும் வலைத்தளங்களுக்குக் கூகிள் அதற்குரிய தொகையைச் செலுத்துகிறது.

வணிகக் கொள்கைகள்

வணிகக் கொள்கைகள்

கூகிளை ஒரு நல்ல விளம்பரதாரர் ஆக நிலைநிறுத்துவது எது தெரியுமா? "விரும்பியபடி விட்டு விடுவது" எனும் கொள்கையே அந்த இரகசியம் . இதன் பொருள் கூகிள் மற்றும் விளம்பரதாரர்களுக்கிடையே எந்தக் குறிப்பிட்ட ஒப்பந்தமும் இல்லை. விளம்பரதாரர் தனது விளம்பரத்தை நிறுத்த முடிவெடுக்கும் போது அதை உடனடியாகச் செய்ய முடியும்.

நம்பகமான பிராண்டு

நம்பகமான பிராண்டு

மேலும், அதன் பயனர்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கங்களை வழங்குவதில் அதிகக் கவனம் செலுத்துவதே அதை ஒரு நம்பகமான பிராண்டு ஆக்கியுள்ளது என்பதில் ஐயமில்லை. முன்பு குறிப்பிட்டபடி, கூகிளை அதன் பயனர்களே ஒரு மதிப்பு வாய்ந்த பிராண்ட் ஆக்குகின்றனர், எனவே கூகிள் அதன் பயனர்களின் அனுபவத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

 கூகிள் ப்ளே ஸ்டோர் ஆப்கள்

கூகிள் ப்ளே ஸ்டோர் ஆப்கள்

ஆன்ட்ராய்டு என்பது கூகிளால் உருவாக்கப்பட்ட மொபைல் ஆபரேடிங் சிஸ்டம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலானவை ஆண்டிராய்டு ஆப்களில் இயங்குகின்றன, மேலும் அதன் Play Store இல் மில்லியன் கணக்கான ஆப்கள் உள்ளன.

அண்டிராய்டு

அண்டிராய்டு

கூகிள் நிறுவன வருமானத்தின் இரண்டாம் மிகப்பெரிய ஆதாரம் ஆண்டிராய்டு ஆப்களாகும். இந்த ஆப்களை டவுன்லோட் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் கமிஷனாகப் பெறுகிறது கூகிள் குறிப்பாகப் பணம் செலுத்தும் வடிவிலுள்ள ஆப்களிலிருந்து). கூகிள், மற்ற பிளாட்பார்ம்களில் உபயோகிக்கத் தேவையான சொந்த ஆப்களையும் கொண்டுள்ளது. ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் iOS-க்காகவும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+