இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க ஆட்கள் இருப்பது போன்று சியர் லீடர்களைப் பார்க்கவும் ஆட்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். போட்டியின் போது விளையாட்டு வீரர்கள் அடிக்கும் சிக்சர், பவுண்டரி மற்றும் விக்கெட்களுக்கு இவர்கள் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களின் கண்களைக் கவருவதைத் தவறுவதில்லை.
2008-ம் ஆண்டு முதல் சியர் லீடர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையில் இவர்களைப் போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குறைவான சம்பளமும், பாலியல் தொல்லைகளும் எழுவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் சம்பளமாக எவ்வளவு பெறுகிறார்கள் என்று இங்குப் பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சியர் லீடர்களுக்கு ஒரு போட்டிக்கு அடிப்படை சம்பளமாக 6,000 முதல் 12,000 ரூபாய் வரை அளிக்கப்படுகிறது. போனஸ் தொகை 3,000 ரூபாய் வரையிலும், அணியின் பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் 7,000 முதல் 12,000 ரூபாய் வரையிலும், புகைப்படங்கள் எடுக்க 5,000 ரூபாய் வரையிலும் சியர் லீடர்கள் பெறுகின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ்
விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியின் சியர் லீடர்கள் ஒரு போட்டுக்கு அடிப்படை சம்பளமாக 10,000 ரூபாய் பெறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் போனஸ் 3,000 ரூபாய் மற்றும் அணியின் நிகழ்ச்சிகள், பார்ட்டிகளில் பங்கேற்றால் 10,000 ரூபாயும் அளிக்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ்
முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நடனமாடும் சியர் லீடர்கள் அடிப்படை சம்பளமாக 8,000 ரூபாயும், போனஸ் 3,000 ரூபாயும், பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் 8,000 முதல் 9,000 ரூபாய் வரையிலும் பெறுகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சியர் லீடர்கள் ஒரு போட்டிக்கு அடிப்படை சம்பளமாக 9,000 ரூபாயும், ஐபிஎல் பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 9,000 ரூபாயும் பெறுகின்றனர்.
கிங்ஸ் XI பஞ்சாப்
பிரீத்தி ஜிந்தாவின் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக நடனமாடும் சியர் லீடர்கள் அடிப்படை சம்பளமாக 8,000 ரூபாயும், பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் 8,000 முதல் 9,000 ரூபாய் வரையிலும் பெறுகின்றனர்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சன் நெட்வொர்க்கின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சியர் லீடர்கள் அடிப்படை சம்பளமாக 8,000 ரூபாயும், பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் 8,000 முதல் 9,000 ரூபாய் வரையிலும் பெறுகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சியர் லீடர்கள் அடிப்படை சம்பளமாக 8,000 ரூபாயும், பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் 8,000 முதல் 9,000 ரூபாய் வரையிலும் பெறுகின்றனர்.
டெல்லி டேர்டெவில்ஸ்
கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சியர் லீடர்கள் ஒரு போட்டிக்கு அடிப்படை சம்பளமாக 9,000 ரூபாயும், ஐபிஎல் பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 8,000 ரூபாயும் பெறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications