இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் சாமானியர்களின் குடும்பத்தின் நம்பிக்கை நச்சதிரமாக இருப்பது எல்ஐசி நிறுவனம். மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் எல்ஐசி இருக்கும் காரணத்தினாலே மக்கள் இதனைப் பெரும் அளவில் நம்புகின்றனர். இதைக் கெடுக்காத வகையில் மக்களின் தேவைகளையும் பூர்த்திச் செய்து வருகிறது எல்ஐசி.
மக்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகை மூலம் சேரும் பணத்தை எல்ஐசி பல்வேறு வகையில் முதலீடு செய்து வருமானத்தை அதிகரித்து வருகிறது. இதன் வாயிலாகவே மக்களுக்குக் காப்பீட்டுத் தொகை அளிக்க முடியும்.
5 லட்சம் கோடி
இதன் படி எல்ஐசி நிறுவனம் நேரடி பங்கு முதலீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் வரையிலான காலத்திற்கு வர்த்தக லாபமாகச் சுமார் 5 சதவீத்தை பெற்று அசத்தியுள்ளது.
லாபம்
எல்ஐசி நிறுவனம் நினைத்தால் ஒரு நிறுவனத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லவும் முடியும் கீழே இறக்கவும் முடியும். இப்படிப்பட்ட நிலையில் தான் எல்ஐசி இன்று பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
தொடர் உயர்வு
எல்ஐசி செய்யும் பங்கு விற்பனை மற்றும் பங்கு முதலீட்டின் வாயிலாக 2015-16ஆம் ஆண்டில் 11,000 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது, அதேபோல் 2016-17ஆம் ஆண்டில் 19,000 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று உச்சத்தை அடைந்தது.
புதிய உச்சம்
ஏற்கனவே வருடாந்திர லாப அளவீட்டில் 19,000 கோடி ரூபாய் என உச்ச இலக்கை அடைந்திருக்கும் இந்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 25,000 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது எல்ஐசி.
இந்த வரும் எல்ஐசி செய்த பங்கு முதலீட்டை விற்பனை செய்யப் பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் லாபம் அதிகரித்துள்ளது.
வளர்ச்சி
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டில் சுமார் 11.30 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
2017-18ஆம் நிதியாண்டில் அனைத்துக் காலாண்டுகளும் வளர்ச்சியில் இருந்த நிலையில் மார்ச் காலாண்டில் மட்டும் 3.20 சதவீதம் அதாவது 1,088.15 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications