ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா, பீகார், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஏடிஎம்களில் அதிகளவிலான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதனால் தமிழ்நாட்டு மக்களும் தங்களது பணத் தேவைக்காகத் தற்போது ஏடிஎம்களில் வரிசைக்கட்டி நிற்கத் துவங்கியுள்ளனர்.
திடீர் பணத்தட்டுப்பாடு
இந்திய முழுக்கத் திடீரெனப் பணத்தட்டுப்பாடு உருவாக மக்கள் மத்தியில் நிலவும் குழுப்பங்கள், அச்சம் ஆகியவை முக்கியக் காரணமாக இருந்தாலும், மிகவும் குறைந்த காலகட்டத்தில் சொல்லப்போனால் ஒரு வாரத்தில் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவும் இன்றைய நிலைக்கு அடிப்படைப்படையாக 5 காரணங்கள் உள்ளது.
காரணம் #1
வங்கியில் மக்கள் வைப்பு செய்யும் அளவை விடவும் ஏடிஎம் மற்றும் வங்கியில் வித்டிராவல் மூலம் எடுக்கும் பணம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்களுக்குப் போதிய அளவிலான பணம் கிடைக்கவில்லை.
காரணம் #2
மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்க வங்கிகளுக்கு அளிக்கப்படும் லிக்விட் பணத்தின் அளவு ரிசர்வ் வங்கி அதிகளவில் குறைத்துள்ளது. இதுவும் இன்றைய பணத்தட்டுப்பாட்டு நிலைக்கு இதுவும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
காரணம் #3
மேலும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலாக அளிக்க வங்கி நிர்வாகத்தால் தக்க பணிகளைச் செய்தாததும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை விடவும் புதிய ரூபாய் நோட்டுகள் வடிவத்தில் சிறியது.
காரணம் #4
அதேபோல் வங்கிகளுக்குக் கிடைக்கும் குறைந்த அளவிலான லிக்விட் பணத்தை எந்தப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனுப்ப வேண்டும் என்ற முறையான திட்டமிடல் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
காரணம் #5
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி பாதிப்புகளில் இருந்து மக்களும், வர்த்தகர்களும் மீண்டும் வரும் நிலையில் மக்களின் செலவு செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் பணம் மக்கள் கையில் இல்லை.
இதனைச் சரி செய்ய மக்கள் அதிகளவிலான பணத்தை ஏடிஎம்களில் எடுத்து வருகின்றனர்.
தேவைக்கு அதிகமான பணம்
அதேபோல் தற்போது பணத் தட்டுப்பாடு இருக்கும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய பகுதிகளில் ஒருவர் ஒரு நாளுக்கு 20,000 முதல் 40,000 ரூபாய் வரை வங்கி ஏடிஎம்களில் எடுக்கும் காரணத்தால் ஏடிஎம்கள் பணமில்லாமல் முடங்கியுள்ளது.
இத்தகைய நிலை தான் தற்போது தெலுங்கான, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களைத் தாண்சி தற்போது தமிழ்நாட்டையும் தாக்கியுள்ளது.
பணப்புழக்கம்
ஏப்.6 ஆம் தேதியின் படி இந்திய சந்தையில் 18.17 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
வைப்பு நிதி சரிவு
மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் வங்கி வைப்பு நிதி 6.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 15.3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இருந்தது.
#Demonetisation..
ஐபிஎல் சியர் லீடர்களுக்கு இவ்வளவு சம்பளமா!


Click it and Unblock the Notifications