இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் நாட்டில் உள்ள அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களின் சேவைகள் அளவு மற்றும் அதன் விலையை ஒற்றைத் தளத்தில் மக்களுக்கு அளிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுப் புதிதாக ஒரு தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வெளிப்படைத் தன்மை உருவாகும் என டிராய் அமைப்பு நம்புகிறது.

இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்த மக்கள் எவ்விதமான தகவல்களையும் அளிக்கத் தேவையில்லை, எளிமையாக உள் சென்று கட்டணம் மற்றும் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.
தற்போது டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது சொந்த தளத்தில் மட்டுமே சேவை அளித்து வரும் நிலையில், இப்புதிய சேவையின் மூலம் அனைத்து நிறுவனங்களும் விலை மற்றும் சேவை பட்டியலை டிராய் நிறுவனத்திற்குக் கொடுத்தாக வேண்டும்.
இப்புதிய சேவையைப் பயன்படுத்த இதைக் கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications