அதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சமுக வலைத்தளங்களில் ஈடுபாட்டுடன் உள்ளவர். அன்மையில் கத்துவா கற்பழிப்பு போன்ற நிகழ்வுக்காகவும் குரல் கொடுத்தவர். தற்போது அவரது வாட்ஸ்ஆப்-க்கு வந்த ஒரு புகைப்படத்தினை டிவிட்டரில் பதிவேற்று இவர் எங்கு இருக்கிறார், ஐஐஎம்-ல் இவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது என்று, நான் இவருக்கு உதவி செய்ய உள்ளேன் இவர் பற்றித் தகவல் இருந்தால் என்னுடன் பகிருங்கள் என்றும் கேட்டுள்ளார்.
டிவிட்
ஆனந்த் மகேந்திரா செவ்வாய்க்கிழமை ‘இந்த மனிதர் ஐஐஎம் (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில்) மார்க்கெட்டிங் படிப்பினை கற்றுத்தர வேண்டியவர்" என்ற டிவிட்டினை புகைப்படத்துடன் பதிவேற்றிய நிலையில் அதனை 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விரும்பியுள்ளார்கள், 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அதனை ரீடிவிட் செய்துள்ளார்கள்.
படத்தில் என்ன தான் உள்ளது?
ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள படத்தில் ஒரு செறுப்பு தெய்க்கும் தொழிலாளி அமர்ந்திருக்குகிறார். அவருக்குப் பினால் இந்தியில் இங்குக் காயம் அடைந்த செறுப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும், பார்வை நேரம் காலை 9 முதல் 1 மணி வரை. மதிய உணவு இடைவேளை 1 முதல் 2 மணி வரை, பின்னர் மீண்டும் 2 மணி முதல் 6 மணி வரை ஷூக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும், ஜெர்மன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டார்ட்அப் முதலீடு
மேலும் அடுத்த டிவிட்டில் இவரது ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தான் முதலீடு செய்ய விரும்புவதாகவும், யாராவது இவரைக் கண்டு பிடித்தால் தன்னுடன் விவரங்களைப் பகிரவும் என்றும் கேட்டுள்ளார்.
ஆட்டோ டூ ஸ்கார்பியோ
இதே போன்று ஒரு முறை மஹிந்திரா ஸ்கார்பியோ மீது உள்ள காதலால் தனது ஆட்டோவை ஸ்கார்பியோ கார் போன்று மாற்றிப் பயன்படுத்திய ஆட்டோ டிரைவரிடம் இருந்து அதனைப் பெற்றுக்கொண்டு ஸ்கார்பியோ கார் ஒன்றை ஆனந்த் மகேந்திரா பரிசளித்த நிகழ்வு நடந்துள்ளது.
பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனத்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா மூலம் தரவு மோசடி நடைபெற்ற போதும் இந்தியாவின் சமுக வலைத்தளம் ஒன்றை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் ஆன்ந்த் மகேந்திரா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கி தலைவர்..!
இன்போசிஸ்


Click it and Unblock the Notifications