நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், சலில் பாரிக்-ஐ சிஇஓவாக நியமித்த பின்பு பல முக்கிய நடவடிக்கைகளையும் மாற்றங்களையும் இன்போசிஸ் நிர்வாகத்தில் கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்போசிஸ் ஊழியர்களைக் குறிவைத்து முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது.
2 லட்சம் ஊழியர்கள்
சில நாட்களுக்கு முன்பு காலாண்டு மற்றும் வருடாந்திர முடிவுகளை அறிவித்த இன்போசிஸ் தனது 2,00,000 ஊழியர்களுக்குச் சரியாக வேரியபில் பே அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டு சுமார் 10 மில்லியன் டாலர் நிதியை ஸ்பெஷல் போனஸ் பூல்-ஐ அறிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 20 சதவீதத்தை அடையும் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
13,000 கோடி ரூபாய்
இதேபோல் 2019ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு 13,000 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்குத் தக்க வகையில் வர்த்தகமும், நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் போன்ஸ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2 வருடம்
கடந்த 2 வருடத்தை விடவும் ஊழியர்களுக்கு அதிக வேரியபில் பே அளிக்க வேண்டும் எனவும் இன்போசிஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளசு.
100% வேரியபில் பே
மேலும் மார்ச் காலாண்டில் இன்போசிஸ் ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபில் பே அளிக்கப்பட்டுள்ளது இது கடந்த 10 வருடத்தில் அதுபோல் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி உயர்வு
இக்காலாண்டில் சுமார் 2,221 பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, 86 சதவீத ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ஊதிய உயர்வும், மீதமுள்ள 15 சதவீத ஊழியர்கள் 8 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் உடையர்வர்கள். இவர்களுக்குச் சம்பள உயர்வு ஜூலை முதல் வழங்கப்படும் என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அட்ரிஷன் லெவல்
இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேறும் விகிதமான அட்ரிஷன் லெவல் மார்ச் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 18.7 சதவீதமாகவும், மார்ச் 2017 காலாண்டில் 17.1 சதவீதமாகவும் இருந்தது.
ஸ்பெஷல் போனஸ் பூல்
மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற்றத்தின் வாயிலாகவே ஸ்பெஷல் போனஸ் பூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள்
இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது அனைத்து மட்டத்திலும் வர்த்தகத்தை நிலையாகலும், தொடர் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல நம்பிக்கையான மற்றும் திறமையான ஊழியர்களை எதிர்பார்க்கிறது. இதனால் திறமையான ஊழியர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
சம்பள உயர்வு
இந்நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய ஊழியர்களுக்கு அதிகப்படியாக ஒற்றை இலக்க ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாகப் பிரவின் ராவ் காலாண்டு முடிவுகளை வெளியிடும்போது தெரிவித்தார்.
ரூ.2,000 கோடி அபேஸ்..!
நஷ்டம்
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications