இங்கிலாந்து அமேசான் சரக்குக் கிடங்குகளில் (Warehouse) பணிபுரியும் ஊழியர்கள் சிறுநீர் கழிக்க நீண்ட தொலைவு சென்ற வர வேண்டும் என்பதால் பாட்டிலில் சிறுநீர் கழித்துவிட்டு பணியைத் தொடர்வதாகப் பிளட்வொர்த் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கழிவறை சென்று வர நீண்டு நேரம் தேவைப்படுவதால் வேலைக்குச் சிக்கல் ஏற்படுவதாகவும் சரியான நேரத்தில் பணியை முடிக்க முடியாமல் போகும் என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அமேசான் சரக்கு கிடங்கு
அமேசான் நிறுவனத்தின் சரக்கு கிடங்கு 7,00,000 சதுர அடி நில பரப்பில் அமைந்துள்ளது, ஊழியர்கள் கழிவறைக்கு 400 மீட்டர்கள் வரை செல்ல வேண்டும். இப்படி ஒரு சென்று வர 10 நிமிடங்கள் தேவைப்படுகிறது
ஊழியர்களின் நிலை
அமேசானின் சரக்கு கிடங்கில் 1,200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சரக்கு கிடங்கு 4 மாடிகளாக அமைந்துள்ளது. கடைசி மாடியில் உள்ளவர்கள் கழிவறை செல்ல வேண்டும் என்றால் தரை தளத்திற்கே வர வேண்டும் என்ற சூழல் வேறு.
மேற்பார்வையாளர்கள்
ஊழியர்கள் நேரத்தை வீன் அடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க மேற்பார்வையாளர்களும் உள்ளனர். ஊழியர்கள் அதிக நேரம் வீண் அடிப்பதாகக் கண்டறியப்பட்டால் சம்பளம் குறைப்பு போன்றவை நடைபெறுவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹூடிஸ் ஜாக்கெட்கள், சன் கிளாஸ், மொபைல் போன் போன்றவையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர்
எனவே தங்களது நேரத்தினை வீன் அடிக்காமல் குறித்த நேரத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்து வருகின்றனர் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அமேசான் மறுப்பு
அமேசான் நிறுவனம் இந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, தாங்கள் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சிறப்பான முறையில் வேலை பார்க்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் இடையில் பெற்ற ஆய்வு விவரங்கள் அமேசான் நிறுவனத்தில் எடுக்கப்பட்டதா என்று சந்தேகமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
எஸ்பிஐ வங்கி தலைவர்..!
எல்லாம் திட்டமிட்ட செயல்..


Click it and Unblock the Notifications