சபாஷ் சரியான போட்டி.. அனன்யா பிர்லா - நட்டாஷா புனாவாலா..!

நீங்கள் பிறக்கும் போதே கோடிஸ்வரர் ஆகப் பிறக்கவில்லை என்றால் கோடிகளைச் சம்பாதிக்கக் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும், ஒருவேலை நீங்கள் கோடிஸ்வரருக்கு பிறந்து இருந்தால் அதன் பக்கத்தில் மேலும் பல சைபர்களைச் சேர்க்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு போராட்டம், அதில் யாராக இருந்தாலும் சரி!

இங்கு நாம் அனன்யா பிர்லா மற்றும் நட்டாஷா புனாவாலா என்று இருவரை பற்றி இங்குப் பார்க்க இருக்கிறோம். இவர்களும் கோடிஸ்வரர்களின் மகள் என்ற போதிலும் இதில் யார் பெஸ்ட் என்று தேர்வு செய்யச் சொன்னால் என்ன செவீர்கள். முதலில் இவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு இருவரில் யார் டிரெண்டி கோடிஸ்வரர் மகள் என்று பார்க்கலாம்.

அனன்யா பிர்லா

அனன்யா பிர்லா

அனன்யாஸ்ரீ பிர்லா எனப்படும் அனன்யா பிர்லா இன்று ஒரு மிகப் பெரிய பெயர் என்று கூறலாம். இவரைப் பற்றி நீங்கள் கேள்விபட்டத்திலை என்றால் இங்குத் தெரிந்துகொள்ளுங்கள். இவர் கோடிஸ்வரரின் மகள் என்பதையும் தாண்டி தனித்துவம் வாய்ந்தவர் என்று கூறலாம்.

நட்டாஷா புனாவாலா

நட்டாஷா புனாவாலா

நட்டாஷா ஒரு நாகரீகமான வெற்றி பெண். அவரது வெற்றிகள் அடுக்குகள் தனித்துவனாமனவை, மதிப்புடையவை மற்றும் அதிர்ச்சியூட்டுபவை.

அனன்யாவின் குடும்பம், படிப்பும்

அனன்யாவின் குடும்பம், படிப்பும்

ஆதித்யா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மூத்த மகள் தான் அனன்யா. மும்பையில் உள்ள அமெரிக்க ஸ்கூல் ஆ பாம்பேயில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

நட்டாஷாவின் குடும்பமும், படிப்பும்

நட்டாஷாவின் குடும்பமும், படிப்பும்

சைரஸ் புனாவாலாவின் மகன் அதார் புனாவாலை திருமணம் செய்துள்ள நட்டாஷா லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சிஸ் பொருளாதாரப் பட்டம் பெற்றவர். இவரது கணவர் அதார் சீரம் இன்ஸ்டிட்யூட் எனப்படும் மருந்து நிறுவனத்தின் தலைமை செயலாளராக உள்ளார். இருவருக்கும் 2006-ம் ஆண்டுத் திருமணமானது.
இதில் யார் சிறந்தவர் என்றால், பதில் செல்ல கடினமாகவே இருக்கும்.

பணத்தைப் பற்றிப் பார்ப்போம்: பிர்லாவின் மதிப்பு எவ்வளவு?

பணத்தைப் பற்றிப் பார்ப்போம்: பிர்லாவின் மதிப்பு எவ்வளவு?

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 8ம் இடம் பிடித்துள்ள அனன்யாவின் தந்தை குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு 12.6 பில்லியன் டாலர்கள் ஆகும். அனன்யாவுடன் மூன்று நபர்கள் பிறந்துள்ளதால் இவருக்கு 10 சதவீதம் கிடைத்தாலும் இவர் ஒரு பில்லியனரே ஆவார்.

புனாவாலாவின் மதிப்பு எவ்வளவு?

புனாவாலாவின் மதிப்பு எவ்வளவு?

ஃபோர்ப்ஸ் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளவர் சைரஸ் புனாவாலா.சைரஸ் புனாவாலிவிடம் 8.9 பில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ள நிலையில் இவரது மகன் அதாரிடம் 870 கோடி அமெர்க்க டாலர் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. கணவர் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆக இருக்கும் போது மனைவியும் மிகப் பெரிய பிஸ்னஸ் வுமனாகக் கோடிகளில் வளர்ந்து வருகிறார்.

இதில் யார் கொடிஸ்வரர் என்று பார்த்தால் இங்கு நட்டாஷா வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

 

 சமுக வலைத்தளங்களில் ஆக்டிவ் யார்?

சமுக வலைத்தளங்களில் ஆக்டிவ் யார்?

அனன்யாவிற்கு 23 வயது ஆன நிலையில் இவர் டிவிட்டரில் இல்லை என்றாலும் 278 படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 2,55,000 மார்க்குக்களைப் பெற்றுள்ளார். அதே நேரம் நட்டாஷாவிற்கு 36 வயது ஆன நிலையில் அனன்யாவை விடப் பதி புகைப்படங்களைக் குறைவாகவே வெளியிட்டு 2,83,000+ மார்க்குக்களைப் பெற்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் சமமான போட்டி என்று வைத்துக்கொள்ளலாம்.

அனன்யாவின் தொடர்புகள்

அனன்யாவின் தொடர்புகள்

2013 ஆம் ஆண்டில் ஸ்வாத்ந்திரா நிறுவனத்தை நிறுவிய பின்னர், அனன்யா முன்று வருடத்திற்குப் பிறகு 2016-ம் ஆண்டு இ-காமர்ஸ் துறையில் இறங்கினார். அதில் ஆடம்பர பொருட்கள் மற்றும் கைவினை பொருட்களை விற்று வருகிறார். அனன்யாவிற்கு உள்ள இசை ஆர்வத்தினால் பள்ளி குழந்தையாக இருக்கும் போதே கிட்டார் வசிக்கக் கற்றுக்கொண்டது மட்டும் இலாமல் இவரது சிங்கள் டிராக்குகளைத் தயாரிப்பாளர் ஜிம் பியான்ஸ் வெளியிட்டுள்ளார். இவர் சொந்தமாகப் பாடல் எழுதி, இசை அமைக்கும் திறன் உள்ளவர் ஆவார். இவர் எழுதிய இரண்டாம் பாடலான 'Meant To Be' went on to become a platinum' அதிகளவில் விற்பனை செய்து சாதனையும் படைத்துள்ளது.

நட்டாஷாவும் பாலிவுட்டும்

நட்டாஷாவும் பாலிவுட்டும்

பேஷன் ஆடைகளை இவரைப் போன்று சிறப்பாகத் தேர்வு செய்து பயன்படுத்த முடியாது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் அமெர்க்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பெல்கேட்ஸ் மற்றும் உலகின் பிரபள ஆடை வடிவமைப்பாளர்கள் உடன் எல்லாம் கைக்குலுக்கியுள்ளார்.

இருவரில் மிகப்பெரிய வாரிசு யார்?

இருவரில் மிகப்பெரிய வாரிசு யார்?

கிராமப்புற பெண்களுக்கு நிதி மற்றும் நிதி இல்லா உதவிகளை அளிப்பதற்காகவே சவதாந்திரா மைக்ரோ ஃபினாஸ் நிறுவனத்தினைத் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

நட்டாஷாவின் கனவு திட்டம்

நட்டாஷாவின் கனவு திட்டம்

புனேவை சிறந்த நகரமாக மாற்ற மொத்த நகரத்தினைச் சுத்தம் செய்ததில் இவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. புனேவில் உள்ளவர்களுக்குச் சுத்தமான நீர் மற்றும் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்கள் போன்றவற்றை வில்லூ புனாவாலா ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் கீழ் நடத்தி வருகிறார்.

இப்போது சொல்லுங்கள் இருவரில் யார் சிறந்தவர்கள் என்பதை?

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+