இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருவது மட்டும் அல்லாமல் இத்துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையப் பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோ நிலவுக்குச் செல்லும் முயற்சியின் முதல் கட்டத்தைச் சந்திராயன்-1 மூலம் முடித்துள்ள நிலையில் தற்போது 2வது திட்டத்தைச் சந்திராயன்-2 செயற்கைக்கோளை வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விண்ணில் செலுத்த உள்ளது.
சந்திராயன்-1
இஸ்ரோ தலைமையில் உருவாக்கப்பட்ட சந்திராயன்-1 தான் இந்தியாவின் முதல் லூனார் பிரோப். இது அக்டோபர் 22, 2008ஆம் ஆண்டு விண்வெளியில் பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்குத் தலைமை தாங்கியது தமிழரான மயில்சாமி அண்ணாதுரை.
சந்திராயன்-2
தற்போது நிலவு குறித்த ஆராய்ச்சியின் அடுத்தகட்ட திட்டமாகச் சந்திராயன் 2 திட்டத்திற்கு ரஷ்யா உடன் இணைந்து செய்ய இஸ்ரோ இத்திட்டத்தை நவம்பர் 12, 2007இல் கையில் எடுத்தது. ஆனால் பல காரணங்களுக்காக இத்திட்டம் இதுநாள் வரை முடங்கியது.
அனைத்துத் தடைகளையும் தாண்டி சந்திராயன்-2 வருகிற அக்டோபர் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
800 கோடி ரூபாய்
சந்திராயன்-2 திட்டம் சுமார் 800 கோடி கூராய் மதிப்புடையது. இதில் விண்ணில் ஏவு உதவு ராக்கெட் மற்றும் பிறவற்றின் மதிப்பு 200 கோடி ரூபாய். மேலும் செயற்கைக்கோளின் மைய அமைப்பின் மதிப்பு 600 கோடி ரூபாய் என் இஸ்ரோ அமைப்பின் தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.
முக்கியத் தகவல்கள்
சந்திராயன்-2 திட்டத்தில் லேண்டர், ரோவர் பிரோப் ஆகியவற்றை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நிலவில் செயற்கைக்கோள் தரையிறங்கிய உடன் லூனார் படுகை மற்றும் மண் ஆகியவற்றை ஆய்வு செய்து தகவல்களைத் திரும்ப அனுப்ப முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலிவு மற்றும் சிறப்பு
சந்திராயன்-2 திட்டம் மலிவானது மட்டும் அல்லாமல் சிறப்பானதும் கூட என அணு சக்தி மற்றும் விண்வெளி அமைச்சகத்தின் தலைவர் ஜித்தேந்திரா சிங் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications