இந்திய விமானங்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு இணையதளச் சேவை அளிப்பது குறித்து நீண்ட காலமாக விவாதித்து வரும் நிலையில் விரைவில் வைஃபை சேவை அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
தொலைத்தொடர்பு துறை ஆணையமான டிராய் நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கான வைஃபை இணையதளச் சேவை திட்டத்திற்கு வருகின்ற மே 1-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் அனுமதி அளிக்க உள்ளது என்று வியாழக்கிழமை வெளியான நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.
டிராய்
விமானங்களில் வைஃபை இணையதளச் சேவை அளிக்க டிராய் ஒப்புதல் அளித்த உடன் விமான நிறுவனங்களால் பயணிகளுக்குத் தரவு சேவையினை அளிக்க முடியும். ஆனால் கட்டணம் எவ்வளவு என்பதை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கான உரிமத்தினைக் குறிப்பிட்ட இணையதளச் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள்
இந்திய விமானப் பயணிகள் நீண்ட காலமாகவே இணையதளச் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில், வைஃபை சேவை அறிமுகம் செய்யும் போது அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் வருவாய்
வைஃபை இணையதளச் சேவையினை விமானத்தில் வழங்குவது என்பது விமான நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாயினை அளிக்கும்.
விமான நிறுவனங்கள்
2017-2018 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 20.9 சதவீதம் உயர்ந்து 762 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்து இருந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2017-ம் ஆண்டு அறிக்கையில் 4.2 சதவீத வருவாய் உயர்வைப் பெற்றுள்ளதாகவும் அறிவித்து இருந்தது.
கட்டுப்பாடுகள்
தொலைத்தொடர்பு ஆணையானது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் நேரங்களில் மட்டுமே பயணிகள் வைஃபை இணையதளச் சேவையினைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான விதிமுறைகள் வகுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
உஷார்
அதே நேரம் ஐரோப்பிய நாடுகளில் சில விமானப் பயணங்களின் போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் போது விபத்துக்கள் ஏற்படுவதால், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications