பேஸ்புக் தகவல் திருட்டுப் பிரச்சனை எவ்வளவு பெரிதாக வெடித்தாலும், அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பெரிய அளவிலான மாற்றம் ஏதுமில்லை. இதுவே பேஸ்புக்-இன் வெற்றி எனக் கூறலாம். அமெரிக்காவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக நடந்து வரும் விசாரணை இந்நிறுவனத்தின் மதிப்பை கூறுபோட்ட நிலையிலும் திட்டமிட்டபடி புதிய சேவை அறிமுகம் செய்து வருகிறது.
இதன் படி இந்திய வாடிக்கையாளர்களுக்குப் பயன்பெறும் வகையில் பேஸ்புக் செயலியின் வாயிலாக ஒரு மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
புதிய சேவை
பேஸ்புக்-இன் ஆண்டிராய்டு செயலியின் வாயிலாக இந்தியாவில் இருக்கும் அனைத்து டெலிகாம் நிறுவன வாடிக்கையாளர்களும் எளிதாக ரீசார்ஜ் செய்யும் வகையில் இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சேவை பேஸ்புக் செயலி மட்டும் அல்லாமல் மெசேஞ்ர், வாட்ஸ்அப் ஆகியவற்றிலும் ஒருங்கிணைத்து இயக்க முடியும்.
சோதனை
தற்போது இந்தச் சேவை சோதனை தளத்தில் மட்டுமே உள்ளது கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர பேஸ்புக் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்த செய்தியைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் வெளியானது, அப்போது இந்தச் சேவை டெவலப்மென்ட் தளத்தில் இருந்தது குறிப்பித்தக்கது.
எப்படி ரீசார்ஜ் செய்வது..?
தற்போது இந்தச் சேவை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றாலும், எப்படி ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனச் செய்தியை பேக்ட்ரஸ்டெய்லி தெரிவித்துள்ளது.
வழிமுறைகள்
பேஸ்புக் செயலியின் வலது புறத்தில் இருக்கும் ஐகானை கிளிக் செய்தால், கீழே வரும் சேவைகளில் மொபைல் டாப் அப் என் தேர்வு இருக்கும், இதைக் கிளிக் செய்தால் தானாகவே உங்களது டெலிகாம் நிறுவனம் தேர்வாகி இருக்கும்.
இதனால் நீங்கள் மொபைல் திட்டத்தை மட்டும் தேர்வு செய்தால் போதும், பணத்தைச் செலுத்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.
இதில் கொடுமை என்னவென்றால் விசா மற்றும் மாஸ்டர்கார்டுகள் மட்டும் தான் பயன்படுத்த முடியுமாம். இந்தியாவின் ரூபே கார்டு பயன்படுத்த முடியாதாம்.
சேவைகள்
பேஸ்புக் நிறுவனம் பியர் டூ பியர் பேமெண்ட் சேவைகளைத் தனது மெசஞ்ர் செயலியில் 2015ஆம் ஆண்டு முதல் அளித்து வருகிறது. ஆனால் இது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய தலைவர்
இந்தியா மற்றும் ஆசிய பகுதிகளில் இந்தப் பேமெண்ட் சேவையைக் கொண்டு வருவதற்காகப் பேஸ்புக் நிறுவனம் விசா நிறுவனத்தி் இருந்து மூத்த அதிகாரியான சுனைல் ரோஹ்ரா பேமெண்ட் பார்ட்னர்ஷிப் தலைவராக நியமித்துள்ளது.
பேடிஎம்
பேமெண்ட் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பேடிஎம் நிறுவனத்திற்குக் கூகிள்-இன் தேஜ் செயலி பெரிய அதிர்ச்சியாக இருந்த நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனமும் அறிமுகம் செய்ய உள்ளது.
இதனால் பேடிஎம் நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications