நாடு முழுவதிலும் வங்கி ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஒரு வங்கியின் வாடியாளார் அல்லாத பிற வங்கி கார்டுகள் பயன்படுத்தி ஏடிஎம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணத்தினை உயர்த்த வேண்டும் என்று மத்திய வங்கிக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏடிஎம் மையங்களில் இலவச பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட நிலையில் பிற வங்கியின் கார்டுகளைப் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகள் 15 ரூபாய் வரையிலும், பணம் அல்லாத பிற பரிவர்த்தனை செய்யும் போது 5 ரூபாய் வரையிலும் கட்டணமாக வசூலிக்கின்றனர்.
ஏடிஎம் நிறுவன கூட்டமைப்பு
இந்திய ஏடிஎம் நிறுவன கூட்டமைப்பானது புதன்கிழமை வங்கிகள் மற்றும் வங்கி ஒழுங்கு முறை ஆணையமான ஆர்பிஐ உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான சுமுக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எவ்வளவு கட்டணம் உயரும்?
ஆர்பிஐ உடனான பேச்சுவார்த்தையில் இந்திய ஏடிஎம் நிறுவன கூட்டமைப்பானது பிற வங்கி பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தினை 3 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தக் கோரியுள்ளது.
எப்போது முதல் உயர வாய்ப்புள்ளது?
மத்திய வங்கியும் ஏடிஎம் சேவை வழங்குநரிடம் கலந்தாலோசித்து ஜூலை மாதத்திற்குள் இதற்கான நடவடிக்கையினை எடுக்க வங்கிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கியானது ஏடிஎம் ஆப்ரேட்டர்களிடம் பணத்தினை எளிதாக இயந்திரங்களில் மாற்றி அமைக்க ஏற்றவாறு பூட்டப்பட்ட கேசட்களை உருவாக்குமாறும் கோரிக்க வைத்துள்ள நிலையில் அதற்கும் கூடுதல் செலவாகும் என்றும் இந்தக் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏடிஎம் ஆப்ரேட்டர்கள்
ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களினால் ஏற்கனவே இரண்டு வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை கட்டணங்களை அதிகம் பெற்று வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பும் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள் ஆக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏடிஎம் மையங்கள்
இந்தியாவில் உள்ள ஏடிஎம் மையங்களில் 50 சதவீதம் மாத கட்டணங்கள் மூலமாகவும், மீதம் உள்ளவை பரிவர்த்தனை எண்ணிக்கையிலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications