நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் பல வர்த்தக மற்றும் நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வர்த்தகத்தைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது.
மேலும் டிசிஎஸ் நிர்வாகம் சந்திரசேகரன் கையில் இருந்து ராஜேஷ் கோபிநாத் அவர்களில் கையில் மாறிய பின் தற்போது வர்த்தகம் மற்றும் வருமானம் நிலைப்பெற்றுள்ளது.
வருமானம்
இன்று டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட 4வது காலாண்டு முடிவுகளில் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனம் சுமார் 33,069 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 30,639 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று வருகிறது.
டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் இதன் அளவு 31,774 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
லாபம்
2017ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில் 6,622 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற டிசிஎஸ், 2018 மார்ச் காலாண்டில் 6,925 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 6,545 கோடி ரூபாயாக இருந்தது.
ஈவுத்தொகை
மார்ச் காலாண்டில் மட்டும் டிசிஎஸ் தனது முதலாட்டாளர்களுக்குச் சுமார் 29 ரூபாய் ஈவுத்தொகையாகக் கொடுத்துள்ளது. இதேபோல் கடந்த நிதியாண்டில் இதன் அளவு 27.50 ரூபாயைக் கொடுத்தது.
வருவாய் பங்கீடு
மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் வங்கி, நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் பிரிவில் 12,430 கோடி ரூபாயும், உற்பத்தி பிரிவில் 3,576 கோடி ரூபாயும், ரீடைல் மற்றும் நுகர்வோர் பிரிவலி 5,567 கோடி ரூபாயும், தொலைத்தொடர்பு, மீடியா மற்றும் தொழில்நுட்ப துறையில் 5,451 கோடி ரூபாயும், பிற துறையில் 5,051 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications