பிரிட்டன் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற 1 பில்லியன் பவுண்டு முதலீடு செய்ய மோடி திட்டம்..!

பிரிட்டன் நாட்டிற்குச் சென்ற பிரதமர் நிரேந்திர மோடி , அந்நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 1 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமான தொகையை இந்தியா முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

அப்ப நம் நாட்டில்..??

நட்புறவு

நட்புறவு

மோடியின் இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் மத்தியில் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த பல ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றைச் செய்யப்பட்டுள்ள நிலையில்.

அந்நாட்டு வேலைவாய்ப்புகளுக்காக 1 பில்லியன் பவுண்டுக்கு முதலீடு இரு நாடுகள் மத்தியிலான நட்புறவு மேம்படும் எனக் கூறப்படுகிறது.

 

சந்திப்பு

சந்திப்பு

மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோரின் சந்திப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் பிரிட்டன் அரசு புதிய இந்தியா-யுகே வர்த்தகக் கூட்டணியை அறிவித்தது.

புதிய முதலீடு

புதிய முதலீடு

மேலும் இந்நாட்டின் சர்வதேச வர்த்த துறை கூறுகையில் இந்தியாவின் புதிய 1 பில்லியன் பவுண்ட் முதலீடு 5,750 பிரிட்டன் வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளது.

 வளர்ச்சி

வளர்ச்சி

இந்தியா யுகே நாடுகளுக்கு மத்தியில் 2017இல் சுமார் 18 பில்லியன் பவுண்ட் வரையிலான வர்த்தகத்தைச் செய்துள்ளது. இது 2016ஆம் ஆண்டை விடவும் 15 சதவீதம் அதிகமாகும்.

ஐடி

ஐடி

அதேபோல் நாஸ்காம் மற்றும் டெக்யுகே அமைப்புகள் இணைந்து யுகே-இந்தியா டெக் கூட்டணியைப் புதிதாக உருவாக்கியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு, ஆராய்ச்சியை இரு நாட்டு நிறுவனங்களும் இரு நாடுகளிலும் செய்ய முடியும்.

இந்தியாவில்..

இந்தியாவில்..

இந்தியாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வரும் நிலையிலும், பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வரும் நிவையில் பிரிட்டன் நாட்டு வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற இந்தியாவின் 1 பில்லியன் பவுண்ட் முதலீடு இந்தியர்களுக்கு வேதனையை அளிக்கிறது.

வேலைவாய்ப்பு விகிதம்

வேலைவாய்ப்பு விகிதம்

இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றால் ஒரு வருடத்திற்கு 81 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்திய அரசு அதாவது மோடி அரசு உருவாக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+