இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனராக இருக்கும் முகேஷ் அம்பானியின் உயிரை பாதுகாக்கும் பொருட்டாக மத்திய அரசு அவருக்கு Z பிரிவு செக்யூரிட்டி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Z பிரிவு செக்யூரிட்டி
நாட்டின் மிகப்பெரிய பணக்காரர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மத்திய அரசிடம் Z பிரிவு பாதுகாப்பை கொடுக்க வேண்டுகோள் விடுத்தார்.
பொதுவாக இந்த Z பிரிவு பாதுகாப்பை முக்கிய அரசியல்வாதிகள், உயர் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படுவது வழக்கம்.
ஒப்புதல்
முகேஷ் அம்பானியின் இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் இந்தப் பாதுகாப்பிற்கான கட்டணத்தை யார் செலுத்துவார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஹெச். ரகுமான்
Z பிரிவு பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தாலும், இந்தப் பாதுகாப்பிற்கான கட்டணத்தை யார் கொடுப்பது, எத்தனை போலீஸ் அதிகாரிகளை நியமிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹெச். ரகுமான் கூறியுள்ளார்.
கட்டணம்
இதுகுறித்து அறிந்த சிலர் அம்பானிக்கு அளிக்கப்படும் Z பிரிவு பாதுகாப்பிற்கு மாதம் 9 லட்சம் ரூபாயை அம்பானி, மத்திய அரசுக்கு அளிப்பார் எனத் தெரிகிறது.
கோரிக்கை..
2 மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் மும்பை அன்டாலியா வீட்டில் தாக்குதல் செய்வதாக மிரட்டல் வந்ததை அடுத்து, முகேஷ் அம்பானி எழுத்துப்பூர்வமாக அரசுக்கு Z பிரிவு பாதுகாப்பை வேண்டி கோரிக்கை விடுத்தார்.
அரவிந்த் கெஜிரிவால்
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், இவர் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் இவர் ஏன் சிறந்த செக்யூரிட்டி ஏஜென்சியைப் பாதுகாப்பிற்காக நியமிக்கக் கூடாது. எதற்காக அரசு பாதுகாப்பை அளிக்க வேண்டும் எனக் கோபமான கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் கட்சிகள்
எந்த அரசும் முகேஷ் அம்பானிக்கான பாதுகாப்பை மறுக்கவில்லை, இதன் மூலம் எல்லாம் அரசுகளும் இவருக்குச் சாதகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications