தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது டோல்கேட்டில் வாகனங்கள் கட்டணங்களை செலுத்த நீண்டு வரிசையில் காத்திருப்பதைக் குறைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இதனைப் பயன்படுத்தி டோல்கேட்டில் இனி நிற்காமல் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை
இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை அறிமுகம் செய்ய உள்ள இந்தச் செயலியின் உதவியுடன் மொபைல் போனை பயன்படுத்திப் பிரீபெய்டு வால்லெட், கிரெடிட் கார்டுகள் அல்லது வங்கி கணக்குகள் உதவியுடன் எளிதாகப் பணத்தினை ஆட்டோமெட்டிகாகச் செலுத்த முடியும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
டோல்கேட்டில் நிற்க தேவையில்லை
இந்தச் செயலியானது வங்கி கணக்கில் இருந்து நேரடியாகப் பணத்தினை எடுத்துக்கொண்டு டோல் கேட்களில் நிற்காமல் செல்ல உதவும், அதற்கான கட்டண தகவல்களையும் சேமித்து வைக்கும்.
சோதனை
தெசிய நெடுஞ்சாலை துறை இந்தச் செயலியினைச் சென்னை-பெங்களூரு மற்றும் டெல்லி - மும்பை இடையில் சில டோல் பிளாசக்களில் மட்டும் சோதனை செய்து பார்த்துள்ளது.
செயலிக்கு தேவையான விவரங்கள்
செயலியை பதிவிறக்கம் செய்பவர்கள் வாகன விவரங்களை அளிக்க வேண்டும் என்றும், இது தேசிய வாகன தரவு தளமான வாஹனில் சரிபார்த்த பின் பயன்படுத்த அனுமதி அளிக்கும்.
இரண்டு வழிகள் பரிவர்த்தனை
இந்தச் செயலியில் QR குறியீடு பயன்படுத்தியும், யூபிஐ செயலிகள் பயன்படுத்தியும் டோல் பிளாசக்களில் பணம் செலுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக வங்கி கணக்கில் இருந்து பணத்தினை எடுக்க மொபைலில் வைஃபை / ப்ளுடூத் மற்றும் மொபைல் சார்ந்த அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பங்கள் பயன்படுத்திச் சோதனை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் டோல் பிளாசாவினுல் வந்த உடன் இது என்ன வாகனம் எவ்வளவு கட்டணம் என்பதை அறிந்து வங்கி கணக்கு மற்றும் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் படி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட் டிராக்
இதே போன்று ஃபாஸ்ட் டிராக் என்ற முறையினை தேசிய நெடுஞ்சாலை துறை ஏற்கனவே செயல்படுத்தி வரும் நிலையில் இந்தப் புதிய சேவையினை எளிதாகச் செலவு ஏதுமில்லாமல் அனைத்து வாகனங்களும் பயன்படுத்தும் படி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சில்லறை தட்டுப்பாடு குறையும்
இந்த புதிய சேவையினால் சில்லரை இல்லை என்ற காரணங்களுக்காக தாமதம் ஆவது குறையும். அதே நேரம் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் ஏற்படும் சிக்ககளும் குறையும்.


Click it and Unblock the Notifications