உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை.. மோடியின் ஜன் தன் யோஜானா திட்டமும் தோல்வியா?

இந்தியாவில் 19 கோடி நபர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்றும், உலகளவில் இந்தப் பட்டியலில் இராண்டாம் இடத்தினை இந்தியா பிடித்து இருக்கிறது என்றும் உலக வங்கியின் தரவுகள் கூறுகிறது.

சென்ற ஆண்டு மட்டும் இந்தியர்கள் பயன்படுத்தி வரும் வங்கி கணக்கில் கிட்டத்தட்டப் பாதிச் செயல்படாமல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்திய அரசு

இந்திய அரசு

இந்திய அரசு வங்கி கணக்கை திறக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் சில இடங்களில் வங்கி சேவையினைப் பயன்படுத்துவது மற்றும் அளிப்பது என்பது மிகவும் குறைவாக உள்ளதாகவும், பலர் வங்கி கணக்குகள் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 உலக வங்கி

உலக வங்கி

உலக வங்கி மீதம் உள்ள 31 கோடி இந்தியர்களையும் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கினை மார்ச் 2018-க்குள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜன் தன் யோஜனா

ஜன் தன் யோஜனா

பிதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் ஜீரோ மினிமம் பேலன்ஸ் உடன் ஏழை, குறைந்தபட்ச வருமான வரம்பிற்குட்பட்டவர்கள் என அனைவருக்கும் வங்கி கணக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

 வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

பிதான் மந்திரி ஜன் தன் யோஜனா இணையதளத்தினைத் தொடர்ந்து கண்காணித்து வரும் போது இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் சேமிப்புக் கணக்குகள் அதிகரித்துப் போவது தெரிகிறது.

செயல்பாட்டில் உள்ள கணக்குகள்

செயல்பாட்டில் உள்ள கணக்குகள்

பிப்ரவரி மாதம் வரை ஜன் தன் வங்கி கணக்கில் 31.20 கோடி நபர்கள் 75,000 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாகவும், இதில் 25.18 கோடி கணக்குகள் மட்டுமே செயல்படும் வங்கி கணக்குகள் ஆகும். எனில் 6 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் செயல்படாமல் உள்ளது என்று வைத்துக்கொள்ளலாம்.

இந்தியா

இந்தியா

சர்வதேச அளவில் வங்கி கணக்கு இல்லாமல் உள்ள உள்ள 18 வயதிற்கு அதிகமானவர்களில் இந்தியா மட்டும் 10 சதவீதத்தினைப் பிடித்து இருக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன.

உலகம்

உலகம்

உலகம் முழுவதிலும் 69 சதவீத பெரியவர்கள் அதாவது 3.8 பில்லியன் மக்கள் வங்கி கணக்கினை வைத்துள்ளார்கள் அல்லது மொபைல் வங்கி சேவையினைப் பயன்படுத்தித் தங்களது நிதியைப் பராமரிக்கின்றனர்.

மினிமம் பேலன்ஸ்

மினிமம் பேலன்ஸ்

எஸ்பிஐ வங்கியில் தான் அதிகளவில் மக்கள் ஜன் தன் யோஜனா கணக்கினை திறந்துள்ள நிலையில் மினிமம் பேலன்சினை உயர்த்திய போது ஏற்பட்ட சர்ச்சையில் ஜன் தன் யோஜனா, அடிப்படை சேமிப்பு கணக்கு போன்றவற்றுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்று அறிவித்தது.

அபராதம்

அபராதம்

அதே நேரம் எஸ்பிஐ வங்கி சாதாரணச் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் அதன் மீது அபராதம் விதித்த போது ஏற்பட்ட விமர்சனங்களுக்கு ஜன் யோஜனா போன்ற கணக்குகளை நிர்வகிக்கக் கூடுதல் செலவாகிறது. அதனைச் சமாளிக்கவே இந்த அபராத தொகை முடிவு என்றும் அறிவித்தது.

வங்கிகள்

வங்கிகள்

மத்திய அரசு ஜன் தன் யோஜனா திட்டத்தினை அறிமுகம் செய்த போது ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறிப்பிட்ட அளவிலான கணக்கினை திறக்க வேண்டும் என்று இலக்கினை அளித்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+