நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை போன்று பணத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கான்பூரை சேர்ந்த வணிகர்கள் புதிய வழிமுறையாக ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பூஜை செய்துள்ளனர்.
ஆயுத பூஜை
ஆயுத பூஜை போன்ற காலங்களில் நாம் இது போன்று நமது ஊரில் பூஹை செய்து பார்த்துள்ள நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவானது ஏடிஎம் மையத்தில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டில் இருந்து விடுபட என்பதால் டிரெண்ட் ஆகியுள்ளது.
‘ஏடிஎம் தேவா’ பூஜை
இணையத்தில் வெளியாகி உள்ள அந்த வீடியோவில் வணிகர்கள் ஏடிஎம் மையத்தில் உள்ள ‘பணம் இல்லை' என்ற அறிவிப்புப் பலகையினைப் பார்த்த உடன் ஆரத்தி தட்டில், மலர், விளக்கு போன்றவற்றை வைத்து ஏடிஎம் தேவா என்று பூஜை செய்கிறார்.
போராட்டம்
அதுமட்டும் இல்லாமல் அங்கு இருந்த வணிகர்கள் தங்கள் கைகளில் ஏடிஎம் மையங்களில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்ட பலகைகளையும் கைகளில் ஏந்தி வந்திருந்தனர்.
வணிகர்கள்
ஏடிஎம் மையத்தின் அருகில் உள்ள வணிகர்கள் பணத் தட்டுப்பாட்டால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அதற்காகவே இப்படிப் போராட்டத்தினை நடத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மத்திய அரசு
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் தற்காலிக பணத் தட்டுப்பாடு நிலவியுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பணத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள்
முதன் முதலில் ஆந்திரா, தெலுங்கானாவில் துவங்கிய பணத் தட்டுப்பாடானது கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் என அதிகரித்தது. பலர் டிவிட்டர் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் இது குறித்துக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications