ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் இணையதளத்தில் குறைபாடுகள் ஏதும் இல்லாத நிலையில் உனவு ஆர்டர் சேவையில் அடிப்படை ஹாக்கிங் தெரிந்து இருந்தாலே குறைந்த விலைக்கு ஆர்டர் செய்ய முடியும் என்றும் அகமதாபாத்தினைச் சேர்ந்த கன்னீக் சஞ்நானி செய்து கட்டியுள்ளார்.
22 வயதான இவர் ஏர்இந்தியா இணையதளத்தில் ஒரு முறை மும்பையில் இருந்து சான் பிராசிஸ்கோவிற்கு 1 ரூபாய்க்கு டிக்கெட் புக் செய்தும் காட்டியுள்ளார்.
ஐஆர்சிடிசி தளத்தில் ஓட்டை
அன்மையில் மும்பைக்கு ரயில் மூலமாகப் பயணம் செய்யும் போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் நிறைய ஓட்டைகள் உள்ளன. குறைந்த விலையில் உணவை ஆர்டர் செய்ய முடிகிறது நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
அதில் வேடிக்கை என்னவென்றால் இது குறித்து 7 மாதங்களுக்கு முன்பே இவர் ஐஆர்சிடிசி அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே ஆகும்.
ஐஆர்சிடிசி இ-காட்டரிங் இணையதளம் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள இரண்டு இணையதளங்கள் சரிசெய்யப்படாமல் உள்ளது.
டிவிட்
2017 ஜூன் 14-ம் தேதி இந்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ஜூன் 24-ம் தேதி சுரேஷ் பிரபுவிற்கும் ஹாக்கிங் குறித்துத் தகவல் அளித்துள்ளார். அதன் பிறகு ஜூலை 5-ம் தேதி டிவிட்டும் போட்டுள்ளார்.
பேடிஎம் பயன்படுத்தி ஹாக்கிங்
அதன் பிறகு மும்பை பயணம் செய்யும்போது மொபிக்வில் செயலியினைப் பயன்படுத்தி இவர் கடாய் சிக்கனை 1.3 ரூபாய்க்கும், பேடிஎம் பயன்படுத்தி 6.12 ரூபாய்க்கும் பட்டர் நானும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பணம் செலுத்தி வாங்கியுள்ளார். ஆனால் கடாய் சிக்கனுக்கு இவர் 163 ரூபாயும், நாணிற்கு 68 ரூபாயும் கட்டணமாகச் செலுத்தி இருக்க வேண்டும்.
காத்திருக்கிறேன்
ஐஆர்சிடிசி இணையதளம் இதனை எப்போது சரி செய்யும் என்று தான் காத்திருப்பதாகவும், குறைந்த விலைக்குத் தான் வாங்கிய உணவை மும்பை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்து வீடு இல்லா ஒருவருக்குத் தான் இலவசமாக அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
HTTPS - HTTP
இரண்டு செயலிகள் பயன்படுத்தி இவர் ஹாக்கிங் செய்துள்ள நிலையில் அந்த இணையதளங்கள் HTTPS எனப்படும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் HTTP அடிப்படையில் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications