90-களில் பிறந்தவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள். ஏன் என்றால் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள் இவர்கள்தான். உதாரணத்திற்கு அன்றைய கை வீடியோ கேம்-இல் தொடங்கி இன்றைய பிளே ஸ்டேஷன் வரை அனைத்தையும் முதலில் உபயோகப்படுத்தினது இவர்கள் தான்.
90-களில் டீனேஜர்கள் அல்லது குழந்தைகள் இருந்த எல்லோரும் எப்போதும் தற்போதைய உலகத்தைத் தங்களை மிகவும் அபத்தமாகக் காண்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வாஸ்தவம் தான் இருந்தாலும் இக் காலகட்டத்தை அனுபவித்தவர்களுக்கு எக் காலமும் அதைப் போன்று மனநிறைவை அளிக்குமா என்பது சந்தேகம் தான்.
அன்று தங்கள் பெற்றோர்கள் ஒரே ஒரு ரூபாய் கொடுத்தாலே அதை வைத்து பள்ளி காலங்களில் அதிகபட்ச சந்தோஷத்தை வாங்கியவர்களுக்கு அதனை நினைவுகூரும் வகையில் இந்தப் பதிவு இருக்கும்.
1 ரூபாய் பெப்சி
ஒரு ரூபாய்க்கு பெப்சி, இதை யார் தான் மறுப்பார்கள். அப்போதைய குளிர்பானம், நண்பர்களுடன் பள்ளி முடிந்த பின் விரும்பிப் பருகும் பாணம் இது. அதில் உள்ள ஐஸ் கட்டி போன்று சாறு அதன் சுவையை மேலும் உயர்த்திக் காட்டும்.
தண்ணீர் பாக்கெட்
இன்று எக்குத்தப்பாக எகிறிநிற்கும் தண்ணீரின் விலை அன்று ஐஸ் தண்ணீர் பாக்கெட்டின் விலை ஒன்று மட்டுமே. கோடைக் காலங்களில் சுவைத்தாள் இதன் ருசியே தனி.
பாணி பூரி
இன்று நான்கு பாணி புரி-க்கு 20 ரூபாய் செலவிடவேண்டி இருக்கிறது ஆனால் 90-களில் ஒரு ரூபாய்க் கொடுத்தால் போதும் நான்கு பூரி கிடைக்கும். இதான் அசத்திய வளர்ச்சியோ.
மிட்டாய்கள்
தற்போது ஐந்து வயது குழந்தைகள் கூட டைரி மில்க் சாக்லேட் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலையில் அப்போது இருந்த குழந்தைகள் அல்பேன்லிபே, காபி மிட்டாய் வாங்கி மகிழ்ந்தனர். அதை வாங்குவது அவர்களது உச்சக்கட்ட சந்தோசமாகக் கருதினர்.
கோலி
பல தரப்புபட்ட குழந்தைகளின் பொதுவான பொழுது போக்கு விளையாட்டாகத் திகழ்ந்தது கோலி. இது சிறுவயதில் மிகவும் சுவாரசியமான விளையாட்டு ஆகும். ஜெயிப்பதை பொறுத்து நாம் அடுத்தவர் கோலியையும் கைப்பற்றலாம்.
வளையும் பென்சில்
இந்தப் பென்சில் என்றால் 90-களில் குழநைதைகளுக்குக் கொள்ளைப் பிரியம், இந்தப் பென்சில்-ஐ வைத்திருக்காத குழந்தைகளையே பார்க்க முடியாது. இதன் சிறப்பே இதை எந்தக் கோணங்களிலும் வளைத்துக்கொள்ளலாம்.
வாட்டர் டாட்டூ
இக்காலத்தில் 15 வயது சிறுவர்களே பச்சை குத்துவது போல் டாட்டூக்களைக் குத்திக்கொள்கின்றனர் ஆனால் அப்பொழுது எல்லாம் நாம் வாங்கும் பூமாருக்கு இலவசமா கிடைக்கும் கலர் பொம்மை டாட்டூகள் தான் மிகவும் பிரபலம்.
நட்ராஜ் பென்சில்
இதன் விளம்பரங்கள் தான் இந்தப் பென்சில்-இன் சிறப்பே. இதற்குப் போட்டியாக இருந்த பென்சில்கள் இது அளவிற்குக் குறைந்த விலை அல்ல. இதனாலேயே நட்ராஜ்-க்கு வரவேற்பு அதிகம். எல்லாரும் ஒரே மாதிரி பென்சில் வைத்திருந்தால் அது யாருடையது என்ற குழப்பம் பல நேரம் வரும்.
ரப்பர்
பென்சிலில் எழுதியதை அலைக்க ரப்பர்கள் பல வனங்களில், வடிவங்களில் இருந்தது. அதை வைத்து அளிப்பதை விட விளையாடுவது தான் அதிகம். பொம்மை வடிவம் கொண்ட ரப்பர்கள் கூட ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும் ஆனால் இன்று அந்தக் காசிற்கு நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.
குலஃபீ
குலஃபீ-யை 20-30 ரூபாய்க்குச் செலவிட்டு வாங்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் ஆனால் இதை வெறும் 1-2 ரூபாய்க்கு வாங்கிய காலமும் உண்டு. அன்றைய தினங்களில் சுட்டை தணிக்க மிகப் பெரிய ஆயுதம்.
ஐஸ் கோலா
இது அனைவர்க்கும் பிடித்த ஒரு பாணம். இதைப் பிடிக்காதவர்களே இருக்கமுடியாது. இன்று இந்தியாவில் பெருநகரங்களில் இதைப் பார்ப்பது மிகவும் கடினம். 90 கலங்களில் இதை எல்லாத் தெருவிலும் காணலாம். பள்ளி, கலோரி, திரையரங்கம் என அனைத்தும் இடத்திலும் இதன் விற்பனை அமோகமாக இருந்தது.
புலி மிட்டாய்
அணைத்து பள்ளிகளின் நுழைவிலும் ஒரு வயதான பாட்டியோ தாத்தாயோ புலி மிட்டாய் விற்பார்கள். இதன் விலை வெறும் ஒரு ரூபாய் தான் ஆனால் இதன் சுவைக்கு விலையே கிடையாது.
ரஸ்னா
இந்தப் பெயரை கேட்டாலே இந்த விளம்பரத்தில் வரும் வாசகமான "ஐ லவ் யு ரஸ்னா" தான் நினைவுக்கு வரும் அந்த அளவிற்கு 90'களில் குழந்தைகளுக்கு இந்தப் பாணம் பிடிக்கும். இதன் ஒரு ரூபாய் பாக்கெட்டை வாங்கி அதைப் பள்ளிக்கு எடுத்துச்சென்று அருந்துவதே தனிச் சந்தோசம் தான்.
ரேடியம் பால்
நாம் சிறு வயதில் மிகவும் விரும்பி விளையாடுவது இதனுடன் தான். இதன் வேகம் தான் நமது முக்கியமான பொழுதுபோக்கு அம்சமே. தனிமையில் இனிமை காண உதவுவது இதன் சிறப்பு அம்சம். இது மன உளைச்சலைத் தவிர்க்க ஒரு சிறந்த வழி.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications