இந்திய தனியார் நிறுவனங்கள் பட்டியலில் பங்கு சந்தை மூலதனங்கள் உதவியுடன் டிசிஎஸ் விரைவில் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய முதல் நிறுவனம் என்ற பெயரை பெற இருக்கின்றது. டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 7 சதவீதம் உயர்ந்த நிலையில் ஒரே நாளில் 40,000 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது.
நேற்றைய சந்தை நேர முடிவிற்குப் பிறகு டிசிஎஸ்-ன் சந்தை மூலதனமானது 6.52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 66.92 ரூபாய் என்று சரிந்துள்ள நிலையில் 2017-2018 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டில் அதிக நிகர வருவாயினைப் பெற்று இருப்பதாக டிசிஎஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
காலாண்டு அறிக்கை
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் 6,90.4 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது, டாடா குழுமம் 32,075 கோடி ரூபாய் செயல்பாடுகள் மூலமாக வருவாய் ஈட்டியுள்ளதாகவும், சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இது 8.2 சதவீத உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
டிசிஎஸ் வங்கி சேவைகள், நிதி சேவைகள் மற்றும் காப்பீடு துறை சார்ந்த மென்பொருள் சேவைகளில் உலகின் மிகப் பெரிய வாடிக்கையாளர்களை எல்லாம் தங்கள் வசம் வைத்திருந்த நிலையில் கிளவுட், அனலிட்டிக்ஸ், பிக் டேட்டா போன்றவற்றில் செய்த முதலீடானது அவர்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவையினை வழங்க உதவியுள்ளது என்று தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
டாலர்
டாலர் மதிப்பீடுகளின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிலும் சராசரியாக 3.9 சதவீத உயர்வுடன் 4,972 மில்லியன் டாலர் வருவாயினைப் பெற்றுள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.7 சதவீத உயர்வு என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இன்ஃபோசிஸ்
டிசிஎஸ்-ன் போட்டி நிறுவனமான இன்ஃபோசிஸ் அதிக லாபம் மற்றும் சிறப்பான வருவாயினைப் பதிவு செய்து இருந்தாலும் முதலீட்டாளர்களை மார்ஜின் வழிகாட்டல் கவரவில்லை. அதே நேரம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 45.55 புள்ளிகள் என 4.02 சதவீதம் உயர்ந்து 1,178.25 புள்ளிகளாக வெள்ளிக்கிழமை வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications