இந்தியர்கள் வெளிநாட்டிற்கு குடிபெயர்வது 2017-ம் ஆண்டு சரிவை சந்தித்துள்ளது. 2016-ம் ஆண்டு 1.15 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டில் குடிபெயர்ந்துள்ள நிலையில் 2017-ம் ஆண்டு 92,000 நபர்கள் மட்டுமே குடிபெயர்ந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
அது மட்டும் இல்லாமல் இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தியர்கள் அதிகளவில் எந்த நாட்டிற்குக் குடிபெயர விரும்புகிறார்கள் என்ற விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் எங்குச் செல்ல விரும்புகிறார்கள்?
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை விட நார்வே, பெல்ஜியம் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்குத் தான் இந்தியர்கள் அதிகளவில் செல்ல விரும்புகின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன.
குடியுரிமை
2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமையை 12 சதவீதம் வரை சரிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து செல்வது 30 சதவீதமும், 9 சதவீதம் ஆஸ்திரேலியா செல்வது, கனடா செல்வது 55 சதவீதமும் சரிந்துள்ளது. அதே நேரம் சுவீடனுக்கு 160 சதவீதம், நார்வேக்கு 218 சதவீதம் வரை இந்தியர்கள் செல்வது அதிகரித்துள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
இந்தியர்கள் சிறிய வளர்ந்த நாடுகளுக்குக் குடியேறுவது என்பது சிறிய அளவிளானது ஆனால் இது இன்னும் பல வருடங்களுக்குத் தொடரும். இதற்கு மற்றொரு காரணம் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள அரசியல் சூழல்கள் தான் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியர்கள் எதிர்பார்ப்பு
சுவீடன் மற்றும் நார்வேயில் இந்திய இளைஞர்களுக்கு அதிகச் சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதே நேரம் வேலை வாய்ப்புகள் மட்டும் இல்லாமல் நிரந்தரக் குடியுரிமை, வாழ்வியல் சூழல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
சுவீடன் & நார்வேயில் உள்ள இந்தியர்கள் எண்ணிக்கை?
சுவீடனில் 25,719 இந்தியர்கள் உள்ள நிலையில் 10,370 நபர்கள் இந்திய வம்சாவழியினர்கள் மற்றும் என்ஆர்ஐகளாக 2017-ம் ஆண்டு 15,349 இந்தியர்கள் சுவீடன் சென்றுள்ளனர். இதுவே நார்வேயில் 12,300 இந்திய வம்சாவழியினரும் 7718 என்ஆர்களும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications