சதாப்தி, ராஜ்தானி ரயில்கள் தமதமா? பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இலவச தண்ணீர் பாட்டில் அளிக்கும்!
இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்ரேஷனான ஐஆர்சிடிசி சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயிலில் பயணம் செய்யும் போது தாமதமாக என்றால் இலவசமாகத் தண்ணீர் பாட்டில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
யாருக்கெல்லாம் தண்ணீர் பாட்டில் அளிக்கப்படும்?
ரயில் இரண்டு மாணி நேரம் தாமதமாகச் செல்லும் போது அல்லது 20 நேரங்களுக்கும் அதிகமாகப் பயண நேரம் என்றால் இந்த இலவச வாட்டர் பாட்டில் அளிக்கப்படும்.
பயண நேர மாற்றம்
ரயில் தாமதாகச் செல்லும் போது பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்தினைக் குறைக்கும் படி சிறிய உதவியாக இது இருக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உதாரணம்
ரயில் பயணமானது 5 மணி நேரம் ஆனால் 15 நேரம் வரை தாமதம் ஆகும் போது தண்ணீர் பாட்டில் இலவசமாக அளிக்கப்படும்.
ரயில் நீர் இல்லை என்றால் என்ன ஆகும்?
ஒருவேலை ரயில் நீர் இல்லை என்றால் அதற்கு இணையான பேக் செய்யப்பட்ட குடி நீர் பாட்டில் இலவசமாக அளிக்கப்படும்.


Click it and Unblock the Notifications