பொறியாளர்கள் பலர் ஐடி வேலையினை உதறித்தள்ளி வருகின்றனர். தற்போது இஞ்சினியர்கள் அதிகளவில் கட்டட மற்றும் ஆட்டோமொபைல் துறையினையே விரும்புகின்றனர்.
ஐடி துறையில் அதிகளவில் அனுபவம் உள்ள ஊழியர்கள் பலர் மகேந்திரா & மகேந்திரா, அஷோக் லைலாந்து மற்றும் மாருதி நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பிப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
நாஸ்காம்
இந்திய ஐடி துறை சங்கமான நாஸ்காம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐடி நிறுவனங்கள் ஒரு இலக்க வளர்ச்சியினையே பெற்று இருப்பதாகவும், அதிகளவில் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், முன்பு இருந்தது போன்று வணிகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
கணினி அறிவியல்
இஞ்சினியரிங் படிக்க விரும்பியவர்கள் பலர் நீண்ட காலமாகக் கணினித் துறை சார்ந்த படிப்புகளையே அதிகளவில் தேர்வு செய்து படித்து வந்தனர். இதற்கு வெளிநாட்டிற்குச் சென்று பணிபுரிய அளிக்கப்படும் வாய்ப்புகளும் முக்கியக் காரணங்கள் ஆகும்.
அமெரிக்கா
ஆனால் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் விசா வழங்குவது போன்றவை சரிந்த நிலையில் தான் உள்ளன.
அட்டோமொபைல் துறையில் ஐடி-ன் தாக்கம்
ஆட்டோமொபைல் துறையிலும் பிக் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்னுட்பங்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் ஐடி ஊழியர்கள் பலரும் தங்களது காவணத்தினைத் திருப்பி உள்ளனர்.
மனம் மாற்றம்
முன்பு எல்லாம் மெக்கனிக்கல் இஞ்சினியரிங் படித்தவர்களும் ஐடி நிறுவனங்களில் அதிகளவில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது அந்த நிலை மாற உள்ளதாகவும் அதிகளவில் ஐடி துறை அனுபவம் உள்ள ஊழியர்கள் ஆட்டோமொபல் துறைக்கு விண்ணப்பிப்பதாகவும் அஷோக் லைலாண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோப்பால் மஹாதேவன் தெரிவித்துள்ளார்.
மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் படித்து ஐடி துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அதான் அதிகளவில் விண்ணப்பித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
அதிக வேலைவாய்ப்புகள்
செல்ப் டிரைவிங், எலக்ட்ரிக் வாகனங்கள் என்று ஆட்டோமொபைல் துறை மாறி வரும் நிலையில் ஐடி துறைக்குப் போட்டியாக ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பணிக்கு அதிகளவில் ஊழியர்களை எடுக்கத் துவங்கியுள்ளனர் என்று மனிதவள துறை வல்லுநர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications