ஐஐடி-ல் படித்து இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் எங்களுக்கு லட்சங்களில் சம்பளம் வேண்டாம் என்று உதறித் தள்ளி அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் வெவேறு ஐஐடி கல்லூரிகளில் படித்த முன்னால் மாணவர்கள் 50 பேர் துவங்கியுள்ள இந்தக் கட்சியானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி), பழங்குடியினரின் (எஸ்டி), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) ஆகியோருக்கான கட்சி எனவு தெரிவித்துள்ளனர்.
கட்சி பெயர் என்ன?
பஹுஜன் ஆசாத் கட்சி என்ற பெயர் வேண்டும் என்று இவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளனர். 50 நபர்கள் சேர்ந்து துவங்கியுள்ள இந்தக் கட்சியானது தேர்தல் ஆணைய ஒப்புதுல் மற்றும் கட்சிக்கான அடிப்படை பணிகளில் இறங்கியுள்ளது என்று ஐஐடி டெல்லியில் 2015-ம் ஆண்டுப் பட்டம் பெற்ற நவீன் குமார் தெரிவித்துள்ளார்.
2019 தேர்தலில் போட்டி கிடையாது
இந்தக் குழுவானது தற்போது வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இதுவரை அவர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சென்று சேரவில்லை என்றும் இப்போது கட்சியைத் துவங்கினாலும் அவசரமாக 2019 தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சமுக வலைத்தளங்களில் பிரச்சாரம்
ஆனால் இவர்கள் ஏற்கனவே அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஏபிஜே அப்துல்கலாம் உள்ளிட்டவர்கள் புகைப்படங்களுடன் சமுக வலைத்தளங்கள் மூலமாகத் தங்களது பிரச்சாரத்தினைத் துவங்கியுள்ளனர்.
எந்த அரசியல் கட்சிக்கும் போட்டி இல்லை
எவ்வாறிருப்பினும், இந்தக் குழு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது சித்தாந்தத்திற்குமான போட்டி அல்ல. "நாங்கள் பதிவு செய்தபின், முழுவீச்சில் எந்த ஒரு அரசியல் கட்சியின் சாயலும் இல்லாமல் அட்சி அடிப்படை பணிகளைச் செய்து எங்களை நிலை நிறுத்துவோம் என்றும் நவீன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications