இந்தியாவின் நிதி சார் நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள தரவில் உலகளவில் திறக்கப்பட்டுள்ள புதிய வங்கி சேமிப்புக் கணக்குகளில் இந்தியர்களால் துவங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவரங்களை நிதி சேவைகள் செயலாளரான ராஜிவ் குமார் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் ஃபின் இண்டக்ஸ் அறிக்கையின் படி 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை உலகளவில் 51.4 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாகவும அதில் 55 சதவீதம் இந்தியர்களின் வங்கி கணக்கு என்றும் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஜன் தன் யோஜனா மூலம் வங்கி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் வெள்ளிக்கிழமை விளக்கி இருந்தது.
பெண்கள்
பெண்கள் அதிகளவில் வங்கி கணக்கை துவங்கி வருவதாகவும் 2014-ம் ஆண்டு 20 சதவீதமாக இருந்த பாலின இடைவேளி 2017-ம் ஆண்டு 6 சதவீதமாகச் சரிந்துள்ளது மிகப் பெரிய மாற்றமாகும்.
இந்திய அரசு
இந்திய அரசு வங்கி கணக்கை திறக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் சில இடங்களில் வங்கி சேவையினைப் பயன்படுத்துவது மற்றும் அளிப்பது என்பது மிகவும் குறைவாக உள்ளதாகவும், பலர் வங்கி கணக்குகள் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக வங்கி
உலக வங்கி மீதம் உள்ள 31 கோடி இந்தியர்களையும் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கினை மார்ச் 2018-க்குள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஜன் தன் யோஜனா
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் ஜீரோ மினிமம் பேலன்ஸ் உடன் ஏழை, குறைந்தபட்ச வருமான வரம்பிற்குட்பட்டவர்கள் என அனைவருக்கும் வங்கி கணக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள்
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா இணையதளத்தினைத் தொடர்ந்து கண்காணித்து வரும் போது இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் சேமிப்புக் கணக்குகள் அதிகரித்துப் போவது தெரிகிறது.
செயல்பாட்டில் உள்ள கணக்குகள்
பிப்ரவரி மாதம் வரை ஜன் தன் வங்கி கணக்கில் 31.20 கோடி நபர்கள் 75,000 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாகவும், இதில் 25.18 கோடி கணக்குகள் மட்டுமே செயல்படும் வங்கி கணக்குகள் ஆகும். எனில் 6 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் செயல்படாமல் உள்ளது என்று வைத்துக்கொள்ளலாம்.
இந்தியா
சர்வதேச அளவில் வங்கி கணக்கு இல்லாமல் உள்ள உள்ள 18 வயதிற்கு அதிகமானவர்களில் இந்தியா மட்டும் 10 சதவீதத்தினைப் பிடித்து இருக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன.
உலகம்
உலகம் முழுவதிலும் 69 சதவீத பெரியவர்கள் அதாவது 3.8 பில்லியன் மக்கள் வங்கி கணக்கினை வைத்துள்ளார்கள் அல்லது மொபைல் வங்கி சேவையினைப் பயன்படுத்தித் தங்களது நிதியைப் பராமரிக்கின்றனர்.
மினிமம் பேலன்ஸ்
எஸ்பிஐ வங்கியில் தான் அதிகளவில் மக்கள் ஜன் தன் யோஜனா கணக்கினை திறந்துள்ள நிலையில் மினிமம் பேலன்சினை உயர்த்திய போது ஏற்பட்ட சர்ச்சையில் ஜன் தன் யோஜனா, அடிப்படை சேமிப்பு கணக்கு போன்றவற்றுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்று அறிவித்தது.
வங்கிகள்
மத்திய அரசு ஜன் தன் யோஜனா திட்டத்தினை அறிமுகம் செய்த போது ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறிப்பிட்ட அளவிலான கணக்கினை திறக்க வேண்டும் என்று இலக்கினை அளித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications