அமேசான் நிறுவனம் இந்தியாவில் அடுத்து 5 ஆண்டுத் திட்டமாகத் தங்களது தங்கள் வணிகத்தில் 50 சதவீதம் மளிகை பொருட்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக அமேசான் பிரெஷ் சேவையினை அளிப்பது குறித்தும் விவாதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமெசான் இந்தியாவின் தலைவரான அமித் அகர்வால் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் கிரீம்கள், சோப்புகள், சுத்தம் செய்யும் பொருட்கள் போன்றவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் அமேசான் பிரெஷ்
அதற்காக இந்தியாவில் அமேசான் பிரெஷ் சேவை எப்போது துவங்கப்படும் என்று தன்னால் கூற முடியாது, நீங்கள் கேட்பதால் அடுத்த 5 வருட விஷனில் நடக்கலாம் என்றும், காய்கறிகள், இறைச்சிகள், ஐஸ் க்ரீம் என அனைத்தையும் 2 மணி நேரத்தில் டெலிவரி செய்யும் திட்டமாக இது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்காவில் அமேசான் பிரெஷ் 10 வருடங்களுக்கு முன்பு பிரெஷ் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையாகத் துவங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் பேண்ட்ரி சென்ற பெயரில் சில மளிகை பொருட்கள் மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்காக 4 முக்கிய நகரங்களில் உள்ளூர் வணிகர்களுடன் இணைந்து அமேசான் நவ் சேவையில் 2 மணி நேரத்தில் டெலிவரி செய்வதாகவும் தெரிவித்தார்.
சோதனை
பிரெஷ் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் சேவையினை அமெரிக்காவிற்கு அடுத்தப் படியாக இந்தியாவில் சோதனை செய்து பார்த்துள்ளதாகவும், அடுத்த 5 வருடத்தில் பாதி வணிகம் இதுவாகவே கூட இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இ-காமர்ஸ் துறை வளர்ச்சி
அடுத்த 10 வருடத்தில் இந்திய இ-காமர்ஸ் துறை 200 பில்லியன் டாலர் அளவில் வளர்ச்சி அடையும் என்றும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் 100 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ள நிலையில் மேலும் 100 மில்லியன் பயனர்கள் தேவை என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.
இணையதளம்
2018-ம் ஆண்டுக் கிட்டத்தட்ட 500 மில்லியன் பயனர்கள் இணையதளம் பயன்படுத்தும் நிலையில் ஆசியாவின் 3-ம் மிகப் பெரிய பொருளாதாரமாக, இ-காமர்ஸ் துறை வளர்ச்சியும் இந்தியாவில் இருக்கும்.
வால்மார்ட்
சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட் இந்திய இ-காமர்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கும் முயற்சியின் கடைசிக் கட்டத்தில் உள்ள நிலையில் பல வகையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் முதலீடுகளைப் பெற்று வர்த்தகத்தினை உயர்த்தும்.
ஜெப் பிசோஸ்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் அமேசான் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக உள்ளது என்றும் பிரைம் சேவை அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லாபம்
இந்திய வணிகத்தில் அமேசான் நிறுவனம் பார்க்க இன்னும் ஒரு வருடங்களாவது ஆகும், அதற்காகப் பல வகையில் உழைத்து வருவதாகவும், ஜெப் பிசோஸ் 5 பில்லியன் டாலர் வரை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதனை முறையாகப் பயன்படுத்தி எங்கள் இலக்கை அடைவோம் என்றும் அமித் அகர்வால் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications