பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா ஆகியோரால் பின் தொடரப்படும் விஎச்பி நிர்வாகி அபிஷேக் மிஷ்ரா ஓலா கேப் டிரைவர் இஸ்லாமியர் என்பதால் அதனை ரத்துச் செய்தேன் என்று டிவீட் போட்டது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 20-ம் தேதி ஓலா கேப்-ஐ புக் செய்த போது இஸ்லாமிய ஓட்டுநர் என்பதால் இரத்துச் செய்தேன். நான் ஜிகாதிகளுக்கு எனது பணத்தினை அளிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த மக்கள் பலர் அபிஷேக் மிஸ்ராவை ஓலா நிறுவன வாடிக்கையாளர் பட்டியலில் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் டிவிட்களைப் போட்ட நிலையில் சமுக வலைத்தளங்களில் இவருக்கு எதிராகக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தது.
இதனைப் பார்த்த ஓலா நிர்வாகம் இவரைக் கண்டித்து 'ஓலா நம் நாட்டைப் போலவே, ஒரு மதச்சார்பற்ற தளமாக இருக்கிறது, நாங்கள் எங்கள் ஓட்டுநர்கள் அல்லது வாடிக்கையாளர்களை மதம், சாதி, பாலினம் காரணங்களுக்குப் பிளவு படுத்த விரும்பவில்லை. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் கூட்டாளிகள் அனைவரையும் மரியாதையுடன் சமமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும்' டிவிட் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications