இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினைப் பெற்ற நிறுவனமாகச் சாதனை படைத்துள்ளது.
இன்று காலை சந்தைத் துவங்கிய பிறகு சுமார் 9:49 மணி நிலவரத்தின் படி 6,62,726.36 ரூபாய் சந்தை மூலனத்தினைப் பெற்றது.
40,000 கோடி ரூபாய்
வியாழக்கிழமை டிசிஎஸ் நிறுவனம் 4-ம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட பிறகு வெள்ளிக்கிழமை மட்டும் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளைப் பெற்றதே இந்தச் சாதனைக்கான காரணமாக அமைந்துள்ளது.
இன்றைய நிலவரம்
திங்கட்கிழமை காலை 10:51 மணி நிலவரத்தின் படி டாடா கன்சல்டன்சி நிறுவனப் பங்குகள் 119.25 புள்ளிகள் என 3.54 சதவீதம் உயர்ந்து 3,527.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
காலாண்டு அறிக்கை
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் 6,904 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது, டாடா குழுமம் 32,075 கோடி ரூபாய் செயல்பாடுகள் மூலமாக வருவாய் ஈட்டியுள்ளதாகவும், சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இது 8.2 சதவீத உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
டிசிஎஸ் வங்கி சேவைகள், நிதி சேவைகள் மற்றும் காப்பீடு துறை சார்ந்த மென்பொருள் சேவைகளில் உலகின் மிகப் பெரிய வாடிக்கையாளர்களை எல்லாம் தங்கள் வசம் வைத்திருந்த நிலையில் கிளவுட், அனலிட்டிக்ஸ், பிக் டேட்டா போன்றவற்றில் செய்த முதலீடானது அவர்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவையினை வழங்க உதவியுள்ளது என்று தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
டாலர்
டாலர் மதிப்பீடுகளின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிலும் சராசரியாக 3.9 சதவீத உயர்வுடன் 4,972 மில்லியன் டாலர் வருவாயினைப் பெற்றுள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.7 சதவீத உயர்வு என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications