ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமானப் பயண டிக்கெட்களுக்கு அதிரடி கோடை விடுமுறை சலுகைகாய 1,399 ரூபாய் முதல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. ஏர் ஏசியா இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2018 ஏப்ரல் 29 வரை புக் செய்யலாம்.
ஏர்ஏசியா இந்தியா வழங்கிய இந்த விமான டிக்கெட் சலுகையில் முன்கூட்டியே புக் செய்து 2018 அக்டோபர் 31 வரை பயணம் செய்யலாம்.
ரூ.1,399 சலுகை
ஏர்ஏசியா இந்தியா வழங்கும் இந்த அதிரடி 1,399 ரூபாய் சலுகை விலையில் பெங்களூரு-சென்னை, புவனேஷ்வர்-கொல்கத்தா, ராஞ்ச்சி-கொல்கத்தா, கொச்சி-பெங்களூரு, ஹைதராபாத் - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
பிற வழித்தடங்களில் உள்ள சலுகைகள்
புவனேஷ்வர் - கொல்கத்தா 1,699 ரூபாய், ராஞ்சி - புவனேஷ்வர் 1,699, கொச்சி - ஹைதராஆத் 1,799 ரூபாயும் கொலத்தாவில் இருந்து கவுகாத்தி செல்ல 1,699 ரூபாய், கோவாவில் இருந்து பெங்களூரு செல்ல 1,699 ரூபாய் கட்டணங்கள் என ஏர்ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.
சலுகை விலை டிக்கெட் எங்குக் கிடைக்கும்?
ஏர்ஏசியா இந்தியா வழங்கும் சலுகை விலை டிக்கெட்கள் www.airasia.com என்ற இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். இதற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்ய வேண்டும்.
எவ்வளவு டிக்கெட்களுக்குச் சலுகை
ஏர்ஏசியா இந்தியா நிறுவனமானது சலுகை விலையில் எவ்வளவு டிக்கெட்கள் என்று அறிவிக்கவில்லை. ஆனால் குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications