கள்ள ரூபாய் நோட்டுகளை எதிர்பாராதவிதமாக கடைகளில் கவன குறைவாகப் பெற்றுவிட அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் அன்மை காலமாக இந்தியாவின் பல ஏடிஎம் மையங்களில் கள்ள ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.
எதிர்பாராதவிதமாக உத்திர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தில் கள்ள ரூபாய் நோட்டு விநியோகிக்கப்பட்டு இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.
வைரல் வீடியோ
ஏடிஎம் இயந்திரம் கள்ள ரூபாய் நோட்டு விநியோகிக்கும் விடியோவும் இணையதளத்தில் வைரல் ஆக பறவி வருகிறது. 500 ரூபாய் மதிப்புடைய கள்ள ரூபாய் நோட்டுகளில் பாரத்ய மனோரஞ்சன் வங்கி என்றும், சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா என்று அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
சுபாஷ் நகர் ஏடிஎம்
ஞாயிற்றுக்கிழமை சுபாஷ் நகர் ஏடிஎம் மையத்தில் சுகாதார துறையில் இருந்து ஓய்வு பெற்ற அஷோக் குமார் பதாக்கிற்கு 4,500 ரூபாய் பணம் எடுக்கும் போது கள்ள ரூபாய் நோட்டுகள் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா
சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் விநியோகிக்கப்படுவது ஒன்றும் முதன் முறை அல்ல. இதற்கு முன்பும் பல முறை நடைபெற்றுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை
ஒரு வருடத்திற்கு முன்பு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது கடுமையான பண தட்டுப்பாடு இருந்த நிலையில் டெல்லி எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் இரண்டு முறை கள்ள ரூபாய் நோட்டுகள் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா என்று அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது சர்ச்சையினை ஏற்படுத்தியது. மேலும் சென்ற பிப்ரவரி மாதமும் கான்பூர் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கள்ள ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீராவ் மோடி
நீராவ் மோடிக்கு எப்படி கடன் அளித்து வங்கிகள் ஏமார்ந்து இருக்கின்றனவோ அதே போன்று இதுவும் வங்கி அதிகாரிகளால் ஏற்படும் மோசடியே என்று மக்கள் கூறி வருகின்றனர்.
சமுக வலைத்தளங்கள்
சமுக வலைத்தளங்களில் நாடு முழுவதும் தற்போது ஏடிஎம் மையங்களில் ஏற்பட்டு இருக்கும் பண தட்டுப்பாட்டினை குறைப்பதற்காக ஆளும் அரசு எடுத்து இருக்கும் நடவடிக்கையாகக் கூட இருக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications