சென்னை: பேடிஎம் நிறுவனம் இ-வால்லெட் மட்டும் இல்லாமல் பேமெண்ட்ஸ் வங்கி, பேடிஎம் மால் எனத் தங்களது வணிகத்தினை விரிவு படுத்தி வரும் நிலையில் ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனை நிறுவனமான டிக்கெட்நியூ-ஐ வாங்கப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

சென்னை அலிபாபா பிக்ச்சர்ஸ் கீழ் செயல்பட்டு வரும் டிக்கெட்நியூ நிறுவனத்தினை வாங்குவதன் மூலமாகப் புக்மைஷோ நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளி ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் முதல் இடத்தினைப் பேடிஎம் பிடிக்கும்.
பேடிஎம் நிறுவனம் insider.in நிறுவனத்தினைக் கைப்பற்றியதன் மூலம் ஏற்கனவே திரைப்பட டிக்கெட் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. புக்மைஷோ நிறுவனம் தற்போது இணையதளம் மூலமாக 120 மில்லியன் டிக்கெட்களை விற்பனை செய்து வரும் நிலையில் பேடிஎம் 52 மில்லியன் டிக்கெட்ககளை விற்பனை செய்து வருகிறது.
புக்மைஷோ மெட்ரோ நகரங்களில் பிரபலமாக உள்ள நிலையில் பேடிஎம் நிறுவனம் இரண்டாம் தர நகரங்களில் பிரபலமாக உள்ளது. டிக்கெட்நியூ தளத்திற்குத் தென் இந்தியாவில் மிகப் பெரிய சந்தை உள்ளது.
பேடிஎம் நிறுவனம் டிக்கெட்நியூ-ஐ என்ன விலை கொடுத்து வாங்க இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் 30 முதல் 40 மில்லியன் டாலர் வரை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications