டிசிஎஸ் நிறுவனம் சந்தை மதிப்பீட்டில் 100 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய நிலையை அடைந்தது, இந்திய வர்த்தகச் சந்தையைப் புரட்டிப் போட்டது மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் இந்நிறுவனத்தின் நிலை உயர்ந்துள்ளது.
இத்தகைய நிலையில் அடுத்து 100 பில்லியந் டாலர் நிலையை அடையப்போவது யார் என்ற கேள்வி தான் தற்போது சந்தையில் முக்கியமானதாக உள்ளது.
அடுத்தது யார்..?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தான் அடுத்த 100 பில்லியன் டாலர் அளவை அடையும் நிலையில் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கச்சா எண்ணெய் முதல் டெலிகாம் வரையில் பல துறையில் வர்த்தகம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அக்டோபர் 2007இல் முதல் முறையாக 100 பில்லியன் டாலர் அளவை அடைந்தது. அப்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39.5 ரூபாய்.
இப்போதைய நிலையில், ரூபாய் மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.11 லட்சம் கோடி ரூபாய்.
வளர்ச்சி வேண்டும்..?
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசிஎஸ் நிறுவனத்திற்கு இணையாக 100 பில்லியன் டாலர் அளவை அடைய வேண்டும் என்றால் சந்தையில் இந்நிறுவன பங்குகள் சுமார் 11 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும்.
திங்கட்கிழமை நிலவரத்தின் படி ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூபாய் மதிப்பில் 5.9 லட்சம் கோடியாகவும், டாலர் மதிப்பில் 89.1 பில்லியன் டாலராக உள்ளது.
இன்றைய நிலை..
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 3.80 சதவீதம் வளர்ச்சி அடைந்து 971.60 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications