இந்திய தொலைத்தொடர்பு துறை ஆணையமான டிராய் 2018 பிப்ரவரி மாதத்திற்கான சந்தாதார்கள் தரவை வெளியிட்டுள்ளது. டெலிகாம் மற்றும் வைர்லஸ் என இரண்டு சேவைகளுக்கான சந்தாதார்களும் அதில் இடம்பெற்று இருந்தனர்.
அந்தத் தரவில் ஜனவரி மாதம் 1,175.01 மில்லியன் சந்தாதார்கள் என்பது பிப்ரவை மாத முடிவில் 1,179.83 மில்லியனகா உயர்ந்துள்ளது. வயர்லஸ் சேவையில் ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ மற்றும் எல்டிஈ சந்தாதார்கள் ஜனவர் மாதம் 1,151.94 மில்லியனாக இருந்ததில் இருந்து பிப்ரவரி மாதம் 1,156.87 மில்லியனாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பகுதி வாரியான சந்தாதார்கள் எண்ணிக்கை
நகர் பகுதிகளில் வயர்லஸ் சந்தாதார்கள் எண்ணிக்கை ஜனவரி மாதம் இருந்து 652.85 மில்லியனாக இருந்த நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் 650.03 மில்லியனாகச் சரிந்துள்ளது. அதே நேரம் கிராமப்புறங்களில் 499.09 மில்லியனில் இருந்து 506.84 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பொதுத் துறை vs தனியார் துறை
பொதுத் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது எப்போதும் போலத் தனியார் நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தினைப் பெரும் அளவில் செலுத்தி வருகின்றன. தனியார் துறை வசம் 90.51 சதவீத டெலிகாம் சந்தை உள்ள நிலையில் பொதுத் துறை வசம் 9.49 சதவீதம் மட்டுமே உள்ளது.
டெலிகாம் சந்தை நிலவரம்
ஏர்டெல் வசம் 25.57 சதவீதமும், வோடாபோன் வசம் 18.76 சதவீதமும், ஐடியா வசம் 17.47 சதவீதமும், ரிலையன்ஸ் ஜியோ வசம் 15.31 சதவீதமும், பிஎஸ்என்எல் வசம் 9.43 சதவீதமும், ஏர்செல் வசம் 6.82 சதவீதமும், டெலினார் வசம் 3.40 சதவீதமும், டாடா வசம் 2.87 சதவீதமும், எம்டிஎன்எல் வசம் 0.31 சதவீதமும், ஆர்காம் வசம் 0.06 சதவீதமும் டெலிகாம் சந்தை உள்ளது.
புதிய சந்தாதார்கள்
ஆர்காம், ஏர்செல், டெலினார், டாடா மற்றும் எம்டிஎன்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையானது சரிந்துள்ள நிலையில் பிஎஸ்என்எல், வோடாபோன், பார்தி ஏர்டெல், ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதம் ரிலையன்ஸ் ஜியோவில் அதிகபட்சமாக 8.7 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஐடியாவில் 4.4 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஏர்டெல்லில் 4.1 பில்லியன் வாடிக்கையாளர்களும், வோடாபோனில் 3.2 மில்லியன் வாடிக்கையாளர்களும், பிஎஸ்என்எல்-ல் 0.8 மில்லியன் வாடிக்கையாளர்களும் அதிகரித்துள்ளனர்.
பிப்ரவரி மாத வளர்ச்சி
2018 பிப்ரவரி மாதம் ரிலையன்ஸ் ஜியோவில் அதிகபட்சமாக 5.19 சதவீதமும், ஐடியாவில் 2.24 சதவீதமும், வோடபோனில் 1.52 சதவீதமும், ஏர்டெல்லில் 1.43 சதவீதமும் கூடுதலாக வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.
நடப்பு சந்தை நிலவரம்
ஜியோ சேவை வந்த பிறகு ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது திட்டங்களின் விலையினைக் குறைத்து அதிகத் தரவை அளிப்பதால் மக்கள் அதிகளவில் ரிலையண்ஸ் ஜியோவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications