ரயில் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக டிக்கெட் வழங்கப்படுவதில் பெரிய அளவில் தாக்கம் இல்லை என்பதால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி உள்ளூர் ரயில் டிக்கெட் வாங்கும் முறையினை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
இந்தியன் ரயில்வேஸ் இந்தத் திட்டத்தினை மும்பையில் முதன் முதலாக நடைமுறைக்குக் கொண்டு வரும் பணிகளில் இறங்கி உள்ளது.
மத்திய ரயில்வே
மத்திய ரயில்வே கோட்டத்தில் 25 சதவீத டிக்கெட்கள் ஆட்டோமேட்டிக் டிக்கெட் விநியோக இயந்திரங்கள் மூலமாக விற்கப்படுகிறது. இதுவே வடக்கு ரயில்வே கோட்டத்தில் 18 சதவீத டிக்கெட்கள் ஆட்டோமேட்டிக் டிக்கெட் விநியோக இயந்திரங்கள் மூலமாக விற்கப்படுகிறது.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தொழில்நுட்பம்
ஆட்டோமேட்டிக் டிக்கெட் விநியோக இயந்திரங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூல டிக்கெட் பெறும் தொழில்நுட்பத்தினைப் புகுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் ரயில்வே நிர்வாகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதிலும் உள்ள பல முக்கிய ரயில் நிலையங்களில் ஆட்டோமேட்டிக் டிக்கெட் விநியோக இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் டெபிட் மற்றும் கிரெட்ட் கார்டுகள் சேவையினை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் கார்டுகள்
பல ரயில் நிலையங்களில் தற்போது உள்ள ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக டிக்கெட் வாங்கும் முறையினை ஊக்குவிக்க முன்னால் ரயில் ஊழியர்களை அவர்களது கார்டுகள் மூலமாக டிக்கெட் விநியோகிக்கும் முறையினை மேலும் ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வு
அது மட்டும் இல்லாமல் அனைத்து மண்டல இரயில்வே நிர்வாகங்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக டிக்கெட் விநியோகிக்கும் முறை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications