ஓய்வூதிய நிதி ஆணையமான ஈபிஎப்ஓ நிறுவனங்கள் தங்கலது ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் பிஎப் கணக்கில் பணத்தினைச் செலுத்தவில்லை என்றால் பிஎப் சந்தாதார்களுக்கு நேரடியாகத் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது வருங்கால வைப்பு நிதி ஆணையமான ஈபிஎப்ஓ நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குப் பிஎப் பணத்தினைக் கணக்கில் செலுத்தும் போது மட்டுமே எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்து வருகிறது.
வெளிப்படை சேவை
பிஎப் கணக்குச் சேவையினை வெளிப்படையாகத் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்தப் புதிய முறையினை அமலுக்குக் கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் இந்த அலர்ட் கிடைக்கும்?
பிஎப் கணக்கின் யூஏஎன் எண்ணில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை அளித்துள்ளவர்களுக்கு மட்டுமே இந்தத் தகவல் சேவை அளிக்கப்படும்.
ஈபிஎப் பாஸ்புக்
ஈபிஎப் பாஸ்புக் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ள உமங் செயலி மூலமாகவும், மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மூலமாகவும் பெறக்கூடிய சேவைகள் இருந்தாலும் அதனைப் பல பிஎப் சந்தாதார்கள் பயன்படுத்துவதில்லை.
பங்கு சந்தை முதலீடு
அதுமட்டும் இல்லாமல் விரைவில் பிஎப் கணக்கு வைத்துள்ள ஊழியர்களே தங்களது பிஎப் பணத்தினை எவ்வளவு பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கவும், திருத்தவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications