உலகின் முன்னணி மென்பொருள் மற்றும் தேடல் தளமான கூகிள் மக்களுக்குப் பயன்படும் வகையில் பல சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதன் படி அமெரிக்காவில் கடந்த வருடம் வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்களுக்காகச் சிறப்புச் சேவையை அறிமுகம் செய்தது கூகிள்.
தற்போது இந்தச் சேவையைக் கூகிள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய உள்ளது.
கூகிள் பார் ஜாப்ஸ்
அமெரிக்காவில் இருக்கும் வேலைவாய்ப்புகள் தளத்தை ஒன்றிணைத்து கூகிள் தேடுதல் தளத்தின் வாயிலாக மக்கள் வேலைவாய்ப்புகளைத் தேடலாம். இதுவே கூகிள் பார் ஜாப்ஸ்.
இதே போன்ற சேவையைத் தான் இந்தியாவில் கூகிள் அறிமுகப்படுத்த உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இதன் வாயிலாகக் கூகிள் தற்போது இந்தியாவில் ஐபிஎம் டேலென்ட் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், லிங்கிடுஇன், க்யூஸ், குவிக்கர்ஜாப்ஸ், ஷைன்.காம், டிஜாப்ஸ், டைம்ஸ்ஜாப்ஸ், விஸ்டம்ஜாப்ஸ், ஆசான்ஜாப்ஸ், பிரெஷர்ஸ்வோர்ல்டு, ஹெட்ஹாங்கான்ஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது கூகிள் உடன் இணைந்துள்ளது.
வளர்ச்சி
2017ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் இந்தியாவில் இருந்து சுமார் 45சதவீதம் அதிகத் தேடல்கள் வேலைவாய்ப்புகள் பற்றி இருந்து என ராஜன் அனந்தன் தெரிவித்துள்ளார்.
எஸ்எம்ஈ
மேலும் இந்தியாவில் தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளிப்பது சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தான்.
வசதிகள்
மக்கள் இந்தச் சேவையை டெஸ்க்டாப், மொபைல் (Android and iOS) செயலிகளிலும் பயன்படுத்தலாம். மேலும் முன்னணி வேலைவாய்ப்புகள் தேடுதல் தளத்தில் இருப்பதைப் போலவே இப்புதிய கூகிள் சேவையிலும் பல பில்டர்கள் உள்ளதாகக் கூகிள் தெரிவித்துள்ளது.
போட்டி
கூகிள் இந்தச் சேவையை நிறுவனங்கள் கூட்டணி வாயிலாகச் செய்தாலும் இதன் மூலம் பிற வேலைவாய்ப்புத் தளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும்.


Click it and Unblock the Notifications