மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களாக உள்ள மூன்று இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பது குறித்ஹ்டு விவாதித்டு வருவதாக இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஓரியண்ட்டல் இன்சூரன்ஸ், நேஷ்னல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் யூனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்படும் என்று பட்ஜெட் 2018-2019-ல் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
அருண் ஜேட்லி
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் ஓரியண்ட்டல் இன்சூரன்ஸ், நேஷ்னல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் யூனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்பட்டு ஒரு நிறுவனமான பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
இந்த மூன்று இன்சூரன்ஸ் நிறுவனங்களும் 2016-2017 நிதி ஆண்டில் 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரீமியங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் இணையும் போது ஜெனரல் இன்சூரன்ஸ் துறையில் 35 சதவீத சந்தை இவர்கள் வசம் இருக்கும்.
நிதி அமைச்சகம்
மூன்று நிறுவனங்களையும் இணைப்பது குறித்து நிதி அமைச்சகமும், மூன்று நிறுவன தலைவர்களிடமும் சில கூட்டங்கள் நடைபெற்று விவாதித்தும் உள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் புதிய மாற்றம் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓ-ல் உள்ள பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
2017-2018 நிதி ஆண்டில் மத்திய அரசு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications