இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் துறை வங்கி நிறுவனமான எச்டிஎப்சி 1 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் எச்டிஎப்சி வங்கியின் ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு 6.85 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
7 நாட்கள் முதல் 6 மாதம் வரை
ஒரு வருடத்திற்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களில் எச்டிஎப்சி வங்கி எந்த ஒரு மாற்றத்தினையும் செய்யவில்லை. எனவே 7 முதல் 14 நாட்கள் வரை பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தால் 3.50%, 15 முதல் 29 நாட்கள் வரை டெபாசிட் செய்தால் 4.25 சதவீதமும், 30 முதல் 45 நாட்கள் வரை முதலீடு செய்தால் 5.50%, 46 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை முதலீடு செய்தால் 5.75% வரையிலும் லாபம் அளிக்கும்.
6 மாதம் 1 நாள் முதல் 364 நாட்கள் வரை
எச்டிபெசி வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 6 மாதம் 1 நாள் முதல் 9 மாதம் 15 நாட்கள் வரை டெபாசிட் செய்தால் 6%, இதுவே 9 மாதம் 16 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை முதலீடு செய்தால் 6.25 சதவீதமும் லாபம் அளிக்கும்.
ஒரு வருட பிக்சட் டெபாசிட்
எச்டிஎப்சி வங்கியின் ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 6.75 சதவீதம் என்ற வட்டி விகித லாபம் 6.85 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு வருடம் 17 நாட்கள் முதல் 2 வருடங்கள்
ஒரு வருடம் 17 நாட்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான எச்டிஎப்சி வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தால் இதற்கு முன்பு இருந்த 6.25 சதவீத வட்டி விகித லாபத்தினை 0.75 சதவீதம் உயர்த்தி 0.75 சதவீதமாக அறிவித்துள்ளது.
1% உயர்வு
இரண்டு வருடம் முதல் 5 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்பவர்களுக்கு 6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை லாபம் அளிக்க இருப்பதாக எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள்
இதுவே பிக்சட் டெபாசி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் மூத்த குடிமக்களாக இருந்தால் கூடுதலாக 0.25 சதவீதம் வரை லாபம் பெறுவார்கள்.
ரீடெயில் டெபாசிட்
ரீடெயில் டெபாசிட் திட்டத்தில் 5 வருடம் முதல் 10 வரை முதலீடு செய்பவர்களுக்கு 6 சதவீத வட்டி விகித லாபமே தொடர்ந்து அளிக்கப்படும்.
எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ
எச்டிஎப்சி வங்கி போன்றே எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் இரண்டும் பிப்ரவரி மாதம் முதல் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications