இந்திய டெலிகாம் சந்தையில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை வைத்துள்ள ஏர்டெல் புதிதாகக் களமிறங்கிய ஜியோ உடன் கடுமையாகப் போட்டிபோட்டு வருவது நாம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று.
ஜியோவிற்கு எதிரான தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட ஏர்டெல் ஏற்கனவே சில டெலிகாம் சேவை நிறுவனங்களை வங்கியது, தற்போது எடுத்துள்ளது புதிய முயற்சியிலும் வெற்றிபெற்றுள்ளது.
புதிய முயற்சி
வாடிக்கையாளர், டெலிகாம் சேவை, ஸ்பெக்ட்ரம் தேவை ஆகியவற்றுக்குச் சந்தையில் இருக்கும் சிறிய அளவிலான டெலிகாம் நிறுவனங்களை வாங்கிய ஏர்டெல், இதனை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேரிக்க வழி வகுக்கும் டெலிகாம் இன்பராஸ்டக்சர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தது.
பார்தி இன்பராடெல்
ஏற்கனவே டெலிகாம் இன்பராஸ்டக்சர் பிரிவில் பார்தி ஏர்டெல் நிறுவன கிளையான பார்தி இன்பராடெல் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்துடன் இண்டஸ் டவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாகச் சீனாவை தாண்டி உலகில் இருக்கும் மிகப்பெரிய டெலிகாம் இன்பரா நிறுவனமாக இக்கூட்டணி உருவாக உள்ளது.
பங்கு கைமாற்றம்
இண்டஸ் டவர்ஸ் உடன் பார்தி இன்பராடெல் இணையும் நிலையில், இண்டஸின் ஒரு பங்கிற்குப் பார்தி இன்பராடெலின் 1,565 பங்குகளை அளிக்க வேண்டும்.
இண்டஸ் டவர்ஸ்
`தற்போதைய நிலையில் இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 10.8 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
வோடபோன்
ஏற்கனவே வோடபோன் இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில், பார்தி-இண்டஸ் கூட்டணி நிறுவனத்தில் வோடபோனில் மதிப்பு 4.3 பில்லியன் டாலராகும்.
இதேபோல் கூட்டணிக்காக ஏர்டெல் நிறுவனத்தின் 78.31 கோடி பங்குகளை வோடபோன் பெற உள்ளது
ஏர்டெல்
இதன் மூலம் ஏர்டெல் தனது ஆதிக்கத்தை டெலிகாம் சந்தையில் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. மேலும் ஜியோ உடனான போராட்டத்தில் ஏர்டெல் இந்த இணைப்பு மூலம் கடுமையான போட்டியை அளிக்கும்.


Click it and Unblock the Notifications