பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகள், குழப்பங்களைத் தாண்டி தற்போது சலில் பாரிக் இன்போசிஸ் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் இன்போசிஸை உருவாக்க வேண்டும் என்று தீர்க்கமான முடிவில் சலில் பாரிக் உள்ளார்.
புதிய திட்டம்
இதற்காகச் சலில் பாரிக் மற்றும் உயர் நிர்வாகக் குழு ஆய்வு செய்து ஒரு புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தின் படி அடுத்த 3 வருடத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை இன்போசிஸ் சந்திக்கப் போகிறது.
3 வருடம்
சலில் பாரிக் கையில் எடுத்துள்ள 3 வருட பரிமான வளர்ச்சி திட்டம் மூலம் இன்போசிஸ் 2020-21ஆம் ஆண்டுகளில் பெரிய அளவிலான வளர்ச்சியை அளிக்கும், இதற்கு முதல்கட்டமாக விற்பனை பிரிவில் இன்போசிஸ் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்திற்கு இணையாகப் பெரிய பெரிய ஆர்டர்களை இன்போசிஸ் பெறலாம் எனச் சலில் திட்டமிட்டுள்ளார்.
வளர்ச்சி
ஐடி நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் 7-9% சராசரியாக வைத்துள்ள நிலையில் இன்போசிஸ் 6-8 சதவீத வளர்ச்சி மட்டுமே 2019ஆம் ஆண்டில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இத்தகைய மோசமான சூழ்நிலையைச் சமாளிக்கத் தான் இன்போசிஸ் 3 வருடத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
மாற்றங்கள்
இந்த 3 வருட திட்டத்தில் இன்போசிஸ் முதல் வருடத்தில் நிறுவனமும், முதலீடும் நிலை பெறும், 2வது வருடத்தில் முதலீட்டுக்கான பலன் கிடைக்கும், 3வது வருடத்தில் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் எனச் சலில் இன்போசிஸ் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார்.
டிஜிட்டல் வருவாய்
2018ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் டிஜிட்டல் வர்த்தக வருவாய் மட்டும் 2.79 பில்லியன் டாலராகும், இது இந்நிறுவனத்தின் 25 சதவீத விற்றுமுதல், ஆகவே இதுதான் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த முக்கிய வர்த்தகக் குறிக்கோள் ஆக இருக்கும் என அறிவித்துள்ளது.
டிசிஎஸ்
இதே துறையில் டிசிஎஸ் தனது சேவைகளைத் தொடர்ந்து மாற்றி வந்தாலும், லாப அளவீட்டில் நிலையாக உள்ளது. இது இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக வர்த்தகச் சந்தையில் நிலவுகிறது.
ஊழியர்கள்
அதேபோல் வெளிநாட்டுச் சந்தை வர்த்தகத்தைத் தொடர்ந்து பெற பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்த இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் திறன்களைப் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.
முக்கிய நாடுகள்
அதேபோல் இன்போசிஸ் தனது வர்த்தகத்தை உலக நாடுகளிலும் ஸ்திரமான வளர்ச்சியை அளிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவை தாண்டி ஐரோப்பா, ஆஸ்திரோலியா ஆகிய நாடுகளிலும் திறமையான ஊழியர்களை பணியில் சேர்க்கும் முடிவில் உள்ளது.
பிற துறைகள்
மேலும் இன்போது தற்போது தனது சர்வதேச வர்த்தக்திற்கு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் மட்டும் அல்லாமல் கலை, பொருளாதாரம், லிப்ரெல் ஆர்ட்ஸ் என பல புதுமையான துறையில் இருந்து ஊழியர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக இன்போசிஸின் தலைமை செயல் அதிகாரியான பிரவின் ராவ் தெரிவித்துள்ளார்.
திட்டங்கள்
2018ஆம் நிதியாண்டில் இன்போசில் பெரிய திட்டங்கள் பிரிவில் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை பெற்றுள்ள நிலையில் டிசிஎஸ் 6 பில்லியன் டாலர் அளவிற்கு பெற்றுள்ளது.
இந்த வித்தியாசத்தை சரி செய்தாலே டிசிஎஸ் நிறுவனத்திற்கு இணையாக இன்போசிஸ் வளர்ந்து விடும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications