‘அழகான பெண்கள் வேண்டும்’, ‘ஆண்கள் மட்டும்’ ஆபாசமாக வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிடும் சீன நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வந்தாலும் பரவலான பாலின பாகுபாடு நடைமுறைகள் பின் தங்கியே உள்ளது.

மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் "ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்" என்று சீன அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆண்கள் & பெண்கள் இடையில் பாலின பாகுபாட்டினை வளர்த்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

5-ல் 1 இப்படித் தான்!

5-ல் 1 இப்படித் தான்!

சீனாவில் வெளிவரும் 5-ல் ஒரு வேலை வாய்ப்பு விளம்பரத்தில் இப்படித் தான் உள்ளது என்றும், சீனாவின் 2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் வேலை வாய்ப்புகள் அறிவிப்பிலும் ‘ஆண்கள் மட்டும்' அல்லது ‘ஆண்களுக்கு முன்னுரிமை' என்றும் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு வந்துள்ளது.

அலிபாபா

அலிபாபா

சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா "அழகான பெண்கள் இணை ஊழியராகத் தேவை" என்று விளம்பரம் செய்ததாகவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆணையம்

மனித உரிமை ஆணையம் வெளியிட்ட 99 பக்க அறிக்கை 2013-2018 ஆண்டுக் காலத்தில் 36,000 நிறுவனங்களின் வேளை வாய்ப்பு அறிவிப்புகள், சீன வேலை வாய்ப்பு இணையதளங்கள் மற்றும் சமுக வலைத்தளங்கள் போன்றவற்றினை ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பெண்கள் உடல் அமைப்பு

பெண்கள் உடல் அமைப்பு

சில வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் பெண்கள் உடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும், உயரம், எடை, குரல் அல்லது முகம் போன்றவையும் அந்த வேலைக்குத் தேவையில்லாததை எல்லாம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப நிறுவனங்கள்

தொழில்நுட்ப நிறுவனங்கள்

சீனாவில் சில முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களும் இப்படித் தான் பாலின பாகுபாட்டுடன் வேலை வாய்ப்பு விளம்பரங்களி வெளியிட்டுள்ளன.

பெய்டு

பெய்டு

சீனாவின் மிகப் பெரிய தேடு பொறி நிறுவனமான ‘பெய்டு' 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் உள்ளடக்கத் திறனாய்வாளர்கள் பணிக்கு ஆண்கள் தேவை என்றும், எப்பேர்ப்பட்ட வேலைப் பழுவையும் சமாளித்து விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களிலும் வேலை செய்வதற்கு ஏற்ற ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தது.

மோசமான விளம்பரம்

மோசமான விளம்பரம்

அதிலும் சில விளம்பரங்கள் ஆண் வாடிக்கையாளர்கள் ஈர்க்க ஏற்ற உடல் அமைப்புடன் கூடிய பெண்கள் தேவை என்றெல்லாம் கூட வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

கண்டுகொள்ளாத அரசு

கண்டுகொள்ளாத அரசு

சீனாவில் பாலின ரீதியாக இப்படி விளம்பரம் செய்வது குற்றம் என்றாலும் அதற்கான முழு விளக்கம் இல்லை என்பதால் தான் இப்படி விளம்பரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. சீன அரசு இதனைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்றும் எப்போதாவது நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sexist gender gap job ads in China

Sexist gender gap job ads in Chin
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X